வீரபாண்டியில் தொடரும் மின்அபாயம்: கலெக்டர் அமைத்த ஆய்வுக்குழு அதிருப்தி
வீரபாண்டி திருவிழா திடலில், அமைக்கப்பட்டிருந்த ராட்டினங்களின் மின்இணைப்பு பாதுகாப்பு குறித்து கலெக்டர் அமைத்த சிறப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா தொடங்கி உள்ளது. விழா திடலில் அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்கள் உட்பட பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளில் குறைபாடு இருந்தது. இதனை முறையாக ஆய்வு செய்யாமலேயே அரசுத்துறைகள் பணத்தை வாங்கிக் கொண்டு அனுமதி கொடுத்து விட்டன. (இது எப்போதும் நடைபெறும் வழக்கம் தான்). விழாவின் முதல் நாளே வாலிபர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்தார். அவர் மின்சாரம் தாக்கி இறந்த கம்பத்தை அவசரமாக அகற்றி உள்ளனர். இருப்பினும் போலீசார் அமைத்திருந்த சிசிடிவி., கேமராவில் அந்த காட்சி பதிவாகி விட்டது.
இதனை தொடர்ந்து ராட்டினங்கள் உட்பட எந்த பொழுது போக்கு அம்சங்களும் இயக்க கூடாது என கலெக்டரும், எஸ்.பி.,யும் தடை விதித்தனர். இதனை தொடர்ந்து விழா திடலின் முழு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப கலெக்டர் முரளீதரன் சிறப்புக்குழுக்களை நியமித்தார். இந்தக்குழுவினர் இன்று பகலில் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குழுவிற்கே புரியாத அளவுக்கு குழப்பமான மின் இணைப்புகள், தரம் குறைந்த மின் இணைப்புகள், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றப்படாத மின்இணைப்புகள் இருந்ததை கண்டறிந்தனர். சம்பவ இடத்தில் இக்குழுவினர் ஆய்வு செய்யும் போது, பதில் சொல்லவோ, விளக்கம் அளிக்கவோ யாரும் இல்லை. அந்த அளவு மோசமான நிர்வாக சூழல், இறப்பு நடந்த பின்னரும் அசட்டையான போக்கு இருந்ததை கண்டு அதிகாரிகள் குழு கடும் அதிருப்தி தெரிவி்த்தனர்.
ஒப்பந்ததாரர்கள் அரசியல் பிரசர் மூலம் ராட்டினங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை இயக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனை கண்டறிந்த ஆய்வுக்குழுவினர், நாங்கள் உள்ள அபாயகரமான நிலையை கலெக்டரிடம் சொல்லி விடுவோம். அவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என பகிரங்கமாக நிருபர்களிடம் தெரிவித்தனர். இக்குழுவினர் ஆய்வு செய்யும் போது, அங்கிருந்த பாதுகாப்பு குறைபாடுகளை கண்றிந்து கடும் அதிர்ச்சி அடைந்ததை நிருபர்களும், அங்கிருந்த பக்தர்களும் நேரடியாக கண்டனர். இந்த சூழலில் மின் இணைப்புகள் மூலம் இயக்கப்படும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அனுமதி வழங்குவது பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும் என அவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu