அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் கலந்தாய்வு
பைல் படம்.
Govt College- தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட படிப்புகளில் இருக்கும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஜூன்) 22ம் தேதி முதல் தொடங்கியது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு செய்ய கடந்த மாதம் 27ம் தேதி கடைசி நாளாக இருந்தது.
மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் பதிவானது.
இதில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 விண்ணப்பங்களுக்கு கட்டணங்கள் செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 163 கல்லூரிகளில் ஆக.5 முதல் ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் நாளை வெளியிட உள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu