ஐந்து மாதங்களாகவே சீரான விலை.. விவசாயிகளுக்கு தொடர்ந்து ஜாக்பாட்

ஐந்து மாதங்களாகவே சீரான விலை.. விவசாயிகளுக்கு தொடர்ந்து ஜாக்பாட்
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக காய்கறி விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு நல்ல லாபம் கிடைத்துள்ளது.

தேனி மாவட்டம் முழுக்க தோட்டக்கலை மாவட்டம். இங்கு தினமும் குறைந்த பட்சம் 300 டன் காய்கறிகளாவது விளையும். இங்கிருந்து காய்கறிகள் சென்னை கோயம்பேடு மார்க்கெட் வரை செல்கின்றன. திண்டுக்கல், திருச்சி மற்றும் கேரள மார்க்கெட்டுகளுக்கும் செல்கின்றன.

கடந்த ஐந்து மாதங்களாக தேனி மாவட்டத்தில் விளைச்சல் சக்கைபோடு, போடுகிறது. வழக்கமாக இவ்வளவு விளைச்சல் இருக்கும் சூழலில், விலை வீழ்ச்சி அடைந்து இருக்கும். ஆனால் தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஐந்து மாதங்களாகவே விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக விலை அதிகமாக உயராவிட்டாலும், வீழ்ச்சி அடையவில்லை.

இதனால் விவசாயிகளுக்கு சீரான வருவாய் கிடைத்து வருகிறது. குறிப்பாக சின்னவெங்காயம் விலை கடந்த ஐந்து மாதங்களாகவே கிலோ 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் சின்னவெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல வருவாய் பெற்றுள்ளனர் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.

தேனி உழவர்சந்தையில் காய்கறி விலை நிலவரம் கிலோவிற்கு ரூபாயில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விலை நிலவரம் ஐந்து மாதங்களாகவே சீராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கத்தரிக்காய்- 26, தக்காளி- 26, வெண்டைக்காய்- 65, கொத்தவரங்காய்- 35, சுரைக்காய்- 15, புடலங்காய்- 24, பாகற்காய்- 30, பீர்க்கங்காய்- 36, பூசணிக்காய்- 15, அவரைக்காய்- 55, பச்சைமிளகாய் (உருட்டு)- 40, தேங்காய்- 30, உருளைக்கிழங்கு- 30, கருணைக்கிழங்கு- 30, கருவேப்பிலை- 65, கொத்தமல்லி- 30, சின்னவெங்காயம்- 75, பெல்லாரி (பெரிய வெங்காயம்)- 30, பீட்ரூட்- 25, நுால்கோல்- 25, முள்ளங்கி- 20, முருங்கை பீன்ஸ்- 58, பட்டர்பீன்ஸ்- 140, காரட்- 24, டர்னிப்- 30, காலிபிளவர்- 25, பச்சைபட்டாணி- 48, மொச்சைக்காய்- 45, துவரங்காய்- 45 கீரை வகைகள்- 25. இவ்வாறு விற்கப்படுகிறது.

Tags

Next Story