விவசாயி எழுதிய வாழ்த்துக் கடிதம்: ஸ்டேஷனில் மாட்டி அழகு பார்க்கும் போலீஸார்

விவசாயி எழுதிய வாழ்த்துக் கடிதம்:  ஸ்டேஷனில் மாட்டி அழகு பார்க்கும் போலீஸார்

தேனி மகளிர் ஸ்டேஷனில் விவசாயி எழுதிய வாழ்த்து கடிதத்தை பிரேம் செய்து மாட்டி போட்டோ எடுத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் உஷா, எஸ்.ஐ., மலரம்மாள் கொண்ட போலீஸ் குழுவினர்.

விவசாயி எழுதிய வாழ்த்துக் கடிதத்தை தேனி மகளிர் போலீஸார் ஸ்டேஷனி்ல் பிரேம் செய்து மாட்டி வைத்துள்ளனர்

தேனி மகளிர் போலீசாரின் சேவையை பாராட்டி விவசாயி எழுதிய வாழ்த்து கடிதத்தை, போட்டோ பிரேம் செய்து மக்கள் பார்வைக்கு இன்று ஸ்டேஷனில் மாட்டி வைத்தனர்.

தேனி மகளிர் போலீஸ் ஸ்டேஷனை 2020ம் ஆண்டு இந்தியாவில் நான்காவது சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக தேர்வு செய்து மத்திய அரசு கௌரவித்தது. அப்போது திண்டுக்கல் டி.ஐ.ஜி.,யாக இருந்த முத்துச்சாமிக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த விவசாயி சின்னபெருமாள் ஒரு வாழ்த்து கடிதம் எழுதியிருந்தார்.

இந்த சின்னபெருமாள் இதுவரை 6000க்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதி உள்ளார். இந்திய அஞ்சல்துறை நடத்திய தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளார். இவர் எழுதிய கடிதத்தை திண்டுக்கல் டி.ஐ.ஜி., முத்துச்சாமி (தற்போது கோவை டி.ஐ.ஜி.) அழகிய போட்டோ பிரேம் செய்திருந்தார். உலக கையெழுத்து தினமான இன்று அந்த போட்டோ பிரேமை, டி.ஐ.ஜி. தேனி மகளிர் ஸ்டேஷனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட போலீசார் ஸ்டேஷனில் மக்கள் பார்வைக்கு மாட்டி அழகுபடுத்தி தங்களை வாழ்த்திய விவசாயியை கௌரவப்படுத்தினர்.

Tags

Next Story