/* */

நாடார் சங்க ஆட்சிமன்றக்குழு உறுப்பினருக்கு குவியும் பாராட்டு

தேனி நாடார் சங்க ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கே.கே.ஜெயராமன் நாடாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

HIGHLIGHTS

நாடார் சங்க ஆட்சிமன்றக்குழு உறுப்பினருக்கு குவியும் பாராட்டு
X

கே.கே.ஜெயராம்நாடாருக்கு நாடார் பேரவை நிர்வாகிகள், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சங்கம் தேனியில் 15 கல்வி நிறுவனங்கள், ஒரு மருத்துவமனை, பால்பண்ணை, அச்சகம் உட்பட 9 இதர நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக சொத்துக்களை கொண்ட இந்த சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். இதுவரை சொத்து பாதுகாப்புக்குழு செயலாளராக இருந்த கே.கே.ஜெயராமன் நாடார் முதன் முறையாக ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தேனி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் வர்த்தகப்பிரிவு மாவட்டத்தலைவராகவும், தேனி மாவட்டத்தின் பல்வேறு நாடார் அமைப்புகளின் தலைமைப் பொருப்புகளிலும் இருந்து வருகிறார். இவருக்கு தேனி நலம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜ்குமார், தேனி கிட்னி சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் காமராஜன், வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் சிதம்பரம், பாரதீய ஜனதா கட்சியின் தேனி மாவட்ட முக்கிய பொறுப்பாளரான சிவக்குமரன், தி.மு.க.,வின் முக்கிய வி.ஐ.பி.,யான ஜீவா (இவர்கள் இருவருக்கும் விரைவில் புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட உள்ளது), நாடார் பேரவை மாவட்ட தலைவர் சுரேஷ், தேனி சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் அய்யனார், மாணவரணி செயலாளர் நாகேஸ்வரன், மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், சமூக அமைப்புகள், சங்க அமைப்புகள், ஜாதி அமைப்புகளின் நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் உள்ளார்ந்த நன்றிகளை தெரிவி்த்துக் கொள்வதாக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கே.கே.ஜெயராம் நாடார் தெரிவித்தார்.

Updated On: 20 Jun 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.