தலைமை ஆசிரியர்களுக்குள் மோதல்! இந்து எழுச்சி முன்னணி கடும் அதிருப்தி!
தலைமை ஆசிரியர் மீது புகார் கொடுக்க தேனி கலெக்டர் அலுவலகம் வந்த இந்து எழுச்சி முன்னணியினர்.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் கோம்பை இளம்பரிதிஜீ தலைமையில், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஜீ முன்னிலையிலும் தேனி கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. ஒன்றிய தலைவருடன் இந்து எழுச்சி முன்னணி தேனி நகர தலைவர் செல்வபாண்டிஜீ, தேனி நகர துணை தலைவர் நாகராஜ்ஜீ தேனி நகர துணை செயலாளர் ராசி பிரியாணி சீனிவாசன் ஜீ மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: தேனி மாவட்டம் உத்தமபாளையம் "நன்செய் தன்னார்வ அமைப்பு" சார்பில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பசுமை சார்ந்த பணிகளை மாவட்டம் முழுவதும் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை பணிக்கான விருது நன்செய் தன்னார்வ அமைப்பின் நிறுவனரும் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்குமாருக்கு (பசுமை செந்தில்) தமிழக முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்தார். பசுமைசெந்தில் தொடர்ந்து தன் வாழ்க்கையை சமுதாயத்திற்கு அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார்.
விடாமுயற்சி கார் விபத்து...! இதுதான் காரணமா?
சில மாதங்களுக்கு முன்பு லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் "கர்னல் ஜான் பென்னிகுவிக்" நினைவாக "கானகம் எனும் பசுமை வனம்" அமைக்கும் பணி ஒரு மாதத்திற்கும் நடந்து வருகிறது.
அந்த பள்ளி வளாகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகிய இரு பள்ளிகள் அமைந்துள்ளன. மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் வளவன் கேட்டுக் கொண்டதன் பெயரிலும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கவிதா கேட்டுகொண்டதின் பெயரிலும் இந்த களப்பணியை தன்னார்வலர்கள் மேற்கொண்டனர்.
மரம் நடும் பணியின் போதும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பங்கேற்க வேண்டும் என தன்னார்வலர்கள் அழைத்துள்ளனர். ஆனால் அவர் பங்கேற்க விரும்பவில்லை. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு களப்பணி செய்து கொண்டிருக்கும் போது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இராமசந்திரன் அங்கு வந்து மரக்கன்று நடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
விடாமுயற்சி ஷூட்டிங்.... எப்ப ரீலீஸ் தெரியுமா?
தற்போது பள்ளியில் அனுமதியின்றி மரம் நடவு செய்து இருப்பதாகவும் மண்வெட்டியை எடுத்து வெட்ட வந்ததாகவும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் நன்செய் தன்னார்வ அமைப்பின் நிறுவனரும் மற்றும் ஒருங்கிணைப்பாளருமான பசுமை செந்தில் மீதும் மற்றும் தன்னார்வலர்கள் மீதும் லோயர் கேம்ப் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
சில மாதங்களாக இரு பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உள்ள தனிப்பட்ட பகையை மனதில் வைத்து கொண்டு ஒரு பொய்யான புகாரை கொடுத்துள்ளார். இச்செயலானது தேனி மாவட்டம் முழுவதும் உள்ள தன் ஆர்வலர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. மரம் நடும் புனிதமான பணியை கொச்சப்படுத்தும் விதமாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நடந்து கொண்டுள்ளார். தலைமை ஆசிரியரின் செயல் விருது கொடுத்த தமிழக அரசின் செயலை அவமதிப்பதாக கருதுகின்றோம். எனவே மாவட்ட நிர்வாகம் தலைமையாசிரியர் ராமச்சந்திரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு ஆசிரியர் பணி உத்தரவை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு இந்து எழுச்சி முன்னணி கேட்டு கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu