தேனி தி.மு.க.கவுன்சிலர்கள் மோதல்: மாவட்ட செயலாளர் சமரச கூட்டம்
தங்க தமிழ்செல்வன்
தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியாவும், கவுன்சிலர் சந்திரகலாவும் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பிரச்னையை உருவாக்கியது. தவிர ரேணுப்பிரியா நடத்திய நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்களே பலர் பங்கேற்கவில்லை. ஆடியோ விவகாரமும் சூடு பிடித்தது.
இந்நிலையில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த தலைவர் ரேணுப்பிரியாவிடம் தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் நேரடியாகவே வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பிரச்னை கைமீறி செல்கிறது என்பதை அறிந்த வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் தேனி நகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் 19 பேரையும் அழைத்து சமரச கூட்டம் போட்டார்.
அதில் ஆடியோ விவகாரத்தை கிளப்பியவர்களையும், நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சமரசம் செய்தார். தற்போது தேனி நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகள் இந்த பதவிகள் தொடருமா? தொடராதா? என்பதை தி.மு.க., தலைமை முடிவு செய்யட்டும். நீங்கள் ஒற்றுமையுடன் செயல்படுங்கள், ஒருவருக்கொருவர் மொபைலில் பேசிக்கொள்வதை ரெக்கார்ட் செய்து வெளியிடுவது தவறு. அதுபோல் செய்யாதீர்கள் என்றார்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், தேனி நகராட்சி தி.மு.க.,கவுன்சிலர்கள் பேசிக்கொண்ட விவகாரத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. கட்சி தலைமை தனது முடிவை அறிவிக்கும் வரை ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu