கேரள வனத்துறையை கண்டித்து தேக்கடிக்கு செல்ல முயன்றவர்கள் கைது

கேரள வனத்துறையை கண்டித்து  தேக்கடிக்கு செல்ல முயன்றவர்கள் கைது
X

தேக்கடிக்கு செல்ல முயன்ற விவசாய சங்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

Kerala Forest Department- கேரள வனத்துறையினை கண்டித்து தேக்கடிக்கு செல்ல முயன்றவர்களை கூடலுாரில் போலீசார் கைது செய்தனர்.

Kerala Forest Department- மதுரையில் இருந்து தேக்கடி சென்ற தமிழக அரசு பஸ்சை கேரளாவில் தேக்கடி வனத்துறை சோதனைச்சாவடியில் நிறுத்தி திரும்ப அனுப்பி விட்டனர். இதனை எதிர்த்து கூடலூர் விவசாயிகள் கம்பத்தில் இருந்து தேக்கடிக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் செல்லப்போவதாக அறிவித்தனர்.

ஆனால் கம்பத்தில் பஸ் ஏற விடாமல் தமிழக போலீசார் தடுத்தனர். இதனால் மாற்று வழிகளில் பஸ் ஏறி தேக்கடி செல்ல முயன்ற பாரதீய கிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு, முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், பொருளாளர் ஜெயபால், துணைத்தலைவர் ராஜா உட்பட பலர் குமுளிக்கு சென்று விட்டனர். இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து விட்டனர்.

விவசாயிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மதுரையில் இருந்து தேக்கடி சென்ற அரசு பஸ்சை கேரள வனத்துறையினர் வேறு வழியின்றி தேக்கடி வரை அனுமதித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story