வனத்துறையினை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வனத்துறையினை கண்டித்து  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர், மனு கொடுக்க சென்ற விவசாயிகள்.

பெரியாறு வைகை பாசன விவசாயி கள் சங்கமும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் இணைந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பெரியாறு வைகை பாசன விவசாயி கள் சங்கமும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் இணைந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைப் பொதுச் செயலாளர் நேதாஜி, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சலேத்து மற்றும் பொன் காட்சிக்கண்ணன் தலைமை வகித்தனர்.

தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகேஷ், மாவட்ட பொறுப்பாளர் மேகமலை ஜெயக்குமார், செயலாளர் மகேந்திரன் மற்றும் சங்கர், பொருளாளர் ராதா கணேசன், களப்பணியாளர்கள் மீனாட்சிபுரம் சுப்பையா, உப்புக்கோட்டை செல்லதுரை, கோட்டூர் ராஜா, கம்பம் தவமணி, குரங்கணி பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் உப்பார்பட்டி திருப்பதி, கம்பம் ரஞ்சித் குமார், கோட்டூர் சிற்பி, காட்டு யானைகளால் பாதிப்புக்குள்ளான தேவாரம் பகுதி விவசாயிகள், தேவாரம், மீனாட்சிபுரம் கிராம மக்கள் பங்கேற்றனர்.

பின்னர் வனத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியுள்ளதாவது: 1. தேவாரம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள மூன்று காட்டு யானைகள், தொடர்ச்சியாக விளை நிலங்களை கடுமையான சேதத்திற்கு உட்படுத்தி வருகிறது.

கோம்பை ரங்கநாதர் கோயில் முதல் ராசிங்காபுரம் வரை தொடர்ச்சியாக விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் இப்பிரச்சனை தொடர்பாக தீர்வு காண, தேனி மாவட்ட வனத்துறை, தமிழக வனத்துறை அமைச்சர் மூலமாக மதிகெட்டான்சோலை தேசிய பூங்காவிற்கு அந்த காட்டு யானைகளை Redirect செய்து ஒரு தீர்வை எட்ட முன்வர வேண்டும்.

2-தேவாரம் முதல் சாக்கலூத்து மெட்டு வரையிலான மலைச்சாலையின் உண்மைத்தன்மையை கண்டறிந்து, அந்தச் சாலையை போடுவதற்கு தடையில்லா சான்று வழங்க தேனி மாவட்ட வனத்துறை முன் வர வேண்டும்.

3-போடி வனச்சரகத்திற்கு உட்பட்ட முந்தல் அடகுபாறை பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வரும் வனவிலங்கு வேட்டை தடுக்கப்பட வேண்டும்.

4-முந்தல் வனத்துறை சோதனை சாவடிக்கு மேலே அனைத்து கனரக வாகனங்களும் தடை செய்யப்பட்ட நிலையில், போடி வனச்சரகர் நாகராஜ் தன்னிச்சைக்கு சினிமா படப்பிடிப்பு வண்டிகளை குரங்கணிக்கு மேலே அனுப்புவதும், Mini Hitachi வண்டிகளை முந்தலுக்கு மேலே அனுமதிப்பதுமாக தொடர்ந்து வனச் சட்டங்களை மீறி வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் வேண்டுகிறோம்.

5-கம்பம் மெட்டு, குமுளி , முந்தல் ஆகிய மூன்று எல்லைகளில் அமைந்திருக்கும் வனத்துறை சோதனை சாவடிகளின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை வேண்டுமாய் பணிந்து சமர்ப்பிக்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story