தேனி மாவட்டத்தில் ஜூன் 11 ல் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகேட்பு கூட்டம்

தேனி மாவட்டத்தில் ஜூன் 11 ல்  ரேஷன் கடைகள் தொடர்பான குறைகேட்பு கூட்டம்
X
தேனி மாவட்டத்தில் ஐந்து தாலுகாக்களிலும் வரும் ஜூன் 11 -ல் ரேஷன் பொருட்கள் வழங்கல் தொடர்பான குறைகேட்புக்கூட்டம் நடக்கிறது.

பெரியகுளம் தாலுகாவில் குள்ளப்புரம் கிராமத்தில் தனித்துணை கலெக்டர் சாந்தி தலைமையிலும், தேனி தாலுகா கொடுவிலார்பட்டியில் மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி தலைமையிலும், ஆண்டிபட்டி தாலுகா எம்.சுப்புலாபுரத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விமலாராணி தலைமையிலும், உத்தமபாளையம் தாலுகா பண்ணைப்புரத்தில் ஆர்.டி.ஓ., கவுசல்யா தலைமையிலும், போடி தாலுகா மீனாட்சிபுரத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வக்குமார் தலைமையிலும் குறைகேட்புக்கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில் ரேஷன் கடைகளில் பொருள் விநியோகத்தில் உள்ள குறைகள், கடை மாற்றம், ரேஷன் கார்டு திருத்தங்கள் குறித்து மனு அளிக்கலாம். ரேஷன் கடைகள், வட்டவழங்கல் அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்களில் முன்கூட்டியே மனுஅளித்தால், அந்த மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். முகாம்களில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
future ai robot technology