முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை கேரளா திருடி விட்டதாக புகார்

முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை கேரளா திருடி விட்டதாக புகார்
X

அன்வர் பாலசிங்கம்.

முல்லைப்பெரியாறு அணைக்கு வந்த தண்ணீரை கேரளா மறைமுக வழிகள் மூலமாக திருடி விட்டது எ புகார் கூறப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணைக்கு வந்த தண்ணீரை கேரளா மறைமுக வழிகளில் திருடி விட்டது என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் புகார் எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ரூல்கர்வ் என்பது பலகீனமான நிலையில் உள்ள அணைகளுக்கு மட்டுமே பொருந்தும். முல்லைப்பெரியாறு அணை 40க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பரிசோதனைகளுக்கு பின்னர் வலுவாக உள்ளது என சுப்ரீ்ம் கோர்ட் ஏற்றுக் கொண்டு, இரண்டு முறை அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக தேக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் கேரளா தொடர்ந்து தேக்க விடாமல் தடுத்து வருகிறது. கேரள விஷமிகள் சிலர் ரூல்கர்வ் முறையினை அமல்படுத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளனர். நாளை நாங்களும் ரூல்கர்வ் முறை பொருந்தாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்.

முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீரை கேரளா மூன்று அணைகளை கட்டி இடுக்கி அணைக்கு திருப்பி விட்டுள்ளது எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தும் நேற்று முல்லைப்பெரியாறு அணைக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடிக்கும் அதிக தண்ணீர் வந்தது. ஆனால் அணை நீர் மட்டம் நேற்று மாலை 6 மணிக்கு 135.50 அடியை எட்டியது. இந்த கணக்குப்படி அணை நீர் மட்டம் இரவு 9 மணிக்கெல்லாம் 136 அடியை தாண்டியிருக்க வேண்டும். ஆனால் இன்று காலை 7 மணி வரை அணை நீர் மட்டம் 135.65 அடி மட்டுமே உயர்ந்தது.

இடையில் மாற்று வழிகளின் மூலம் கேரளா தண்ணீரை திருடி விட்டது என்பதை நாங்கள் உறுதியாக சொல்கிறோம். தவிர அணை நிரம்பும் முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இதற்கு துணை போவது என நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் முல்லைப்பெரியாறு அணை நம்மிடம் இருக்குமா? என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளது. அந்த அளவு தமிழக அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதனால் நாளை காலை 10.30 மணிக்கு கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு கூறினார்.

Tags

Next Story