கம்பம் தனியார் பள்ளி முன் கம்யூனிஸ்டு கட்சி பிச்சை எடுக்கும் போராட்டம்

கம்பம் தனியார் பள்ளி முன் கம்யூனிஸ்டு கட்சி  பிச்சை எடுக்கும் போராட்டம்
X

கம்பத்தில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை துன்புறுத்திய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

கம்பத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

கம்பத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை வெளியே நிற்க வைத்து சிரமப்படுத்தி உள்ளனர். அவர்களை பள்ளியில் தேர்வுகளை எழுத அனுமதிக்கவில்லை. பலமுறை கல்லுாரி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், பள்ளி நிர்வாகம் மாணவர்களை மிகவும் சிரமப்படுத்தினர்.

இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அபுதாகீர், அக்கட்சியினர் கையில் பிச்சை பாத்திரம் ஏந்தி மாணவ, மாணவிகள் கல்வி கட்டணம் செலுத்த பிச்சை தாருங்கள் என கேட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை கைது செய்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி