தேனியிலிருந்து ஆலப்புழாவிற்கு பேருந்து போக்குவரத்து துவக்கம்

தேனியிலிருந்து ஆலப்புழாவிற்கு பேருந்து போக்குவரத்து துவக்கம்
X
தேனியில் இருந்து கேரளாவின் முக்கிய சுற்றுலா தளங்களை இணைக்கும் பேருந்து சேவை தொடங்கியது.

கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இந்த பஸ் ஆழப்புலாவிற்கு இயக்கப்படுகிறது. தேனியில் அதிகாலை காலை 3.30 மணிக்கு புறப்படும் பஸ் கம்பம், கட்டப்பனை, வாகமண், ஈராட்டு பேட்டை, பாலா, கோட்டயம் வழியாக காலை 11.15 மணிக்கு ஆலப்புழா சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ஆலப்புழாவில் பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு தேனி வந்தடையும். செப்டம்பர் மாதம் முதல் இந்த பேருந்து பஸ் வசதி துவக்கப்பட்டுள்ளது. இதனால் கோட்டயம் வாகமன், ஆலப்புழா செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பயண நேர அட்டவணை:

தேனி - 03.30 AM.

கம்பம் - 04.30 AM.

கட்டப்பனை - 05.30 AM.

வாகமன் - 07.15 AM.

ஈராட்டுபேட்டை - 08.20 AM.

பாலா - 8.40 AM.

கோட்டயம் - 09.40 AM.

ஆலப்புழா - 11.15 AM.

மறுமார்க்கத்தில் ஆழப்புலாவில் புறப்படுகிறது.

ஆழப்புலா -02.50 PM.

கோட்டயம் - 04.20 PM.

பாலா - 05.20 PM.

ஈராட்டுபேட்டை - 05.45 PM.

வாகமன் - 06.45 PM.

கட்டப்பனை -08.30 PM.

கம்பம் - 09.30 PM.

தேனி - 10.30 PM.

தேனி - ஆலப்புழா டிக்கெட் கட்டணம் ரூ.269 ரூபாய் மட்டுமே.

Tags

Next Story
பெண்கள்  அடிக்கடி மருதாணி வைப்பதன் ரகசியம் இதுதானா...?