அவர கண்டா வரச்சொல்லுங்க...தேனி நரிக்குறவ இன மக்களின் ஆசை நிறைவேறுமா?
''முதல்வரை கண்டா வரச்சொல்லுங்க… அவர கையோடு கூட்டி வாருங்க…'' இது தான் நரிக்குறவ மக்களின் தற்போதய ஆத்மரீதியான பாடலாக அமைந்துள்ளது. அந்த அளவு தமிழகம் முழுவதும் நரிக்குற இன மக்கள் முதல்வர் மீது அன்பு பொழிந்து வருகின்றனர்.
தேனியில் தென்றல் நகரில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு பலநுாறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவ பெண்ணை பாராட்டியது, நரிக்குறவர் வீட்டிற்கு சென்று இட்லி, உளுந்தவடை, நாட்டுக்கோழி குழம்பு சாப்பிட்டது தமிழகம் முழுவதும் நரிக்குறவர் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
தேனியில் கலெக்டர் அடிக்கடி நரிக்குறவர் காலனிக்கு சென்று அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பார். இப்போது தேனி வருகையின்போது முதல்வர் நரிக்குறவர் காலனிக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் இங்குள்ள நரிக்குறவர் காலனி மக்கள் முதல்வரை வரவேற்ற இட்லி மாவு, உளுந்த மாவு, நாட்டுக்கோழிடன் தயாராக உள்ளனர்.
முதல்வர் தங்கள் வீட்டிற்கு வருவார் என பலரும் நம்புகின்றனர். எந்த வீட்டிற்கு வந்தாலும் சூடாக இட்லி, உளுந்தவடை, நாட்டுக்கோழி குழம்பு, டீ அல்லது காபி கொடுத்து உபசரிக்க தயாராக உள்ளதாக காலனி மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu