ஆண்டிபட்டி அருகே கல்லுாரி மாணவியின் உயிரை பறித்த மொபைல் போன் கேம்

ஆண்டிபட்டி அருகே கல்லுாரி மாணவியின் உயிரை பறித்த மொபைல் போன் கேம்
X
ஆண்டிபட்டி அருகே, மொபைல் போனில் கேம் விளையாடுவதை பெற்றோர்கள் கண்டித்ததால் கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன், 50. இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பவித்ரா, 19. இவர் தேனி தனியார் கல்லுாரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், வீட்டில் எந்த நேரமும் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த பவித்ரா, தனது வீட்டின் மாடியில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். ராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி