தேனி என்.எஸ்., கல்லுாரியில் 'கல்லுாரி கனவு' திட்ட முகாம்
தேனியில் நடந்த கல்லுாரி கனவு திட்ட முகாமில் மாணவிகளுக்கு வழிகாட்டி புத்தகத்தை கலெக்டர் முரளீதரன் வழங்கினார்.
தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியில் 'கல்லுாரி கனவு' திட்ட முகாமினை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், டி.ஆர்.ஓ., சுப்பிரமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, முதன்மைக்கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், வருவாய் கோட்டாட்சியர்கள் சிந்து, கவுசல்யா, தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் அண்ணாச்சி உட்பட பலர் பங்கேற்றனர்.
கலெக்டர் முரளீதரன் பேசுகையில், நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்ட 'கல்லுாரி கனவு' திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த வழிகாட்டும் நிகழ்ச்சியில் எந்த கல்லுாரியில் எந்தெந்த படிப்புகள் உள்ளன. யார்? யாருக்கு? எந்தெந்த படிப்புகள் பொருத்தமாக இருக்கும். எதிர்கால வேலை வாய்ப்புக்கு உகந்த படிப்புகள் எவை? என்ற விளக்கங்களை பல்வேறு துறைகளின் நிபுணர்கள் வழங்குகின்றனர். வந்துள்ள மாணவ, மாணவிகள் அத்தனை பேருக்கும் கல்லுாரி கனவு வழிகாட்டி புத்தகமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu