தேனியில் பெண்களுக்கான பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்

தேனியில் பெண்களுக்கான பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
X

தேனி கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே பெண்களுக்கு பாலியல் ரீதியாக விழிப்புணர்வு  ஏற்படுத்தும் நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

பெண்களுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோட்டீஸ்களை தேனி கலெக்டர், எஸ்.பி., பொதுஇடங்களுக்கு சென்று மக்களுக்கு நேரடியாக விநியோகித்தனர்.

தேனி அருகே வடபுதுப்பட்டி தனியார் மில்லில் பெண்களுக்கான பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

தேனி கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன், எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஷ்வரி, குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் சத்தியநாராயணன், பெரியகுளம் சப்-கலெக்டர் (பொறுப்பு) சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

பெண்களை பாலியல் சிக்கல்களில் இருந்து பாதுகாக்க நம் நாட்டில் வலுவான சட்டநடைமுறைகள் உள்ளன. இது தொடர்பாக தனியார் நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் தங்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் பாலியல் அநீதிகளை எதிர்த்து தைரியமாக புகார் கொடுக்க வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். குற்றங்கள் நடப்பது முற்றிலும் தடுக்கப்படும் என கலெக்டர் முரளீதரன் பேசினார்.

பின்னர் எஸ்.பி., கலெக்டர் மற்றும் ்அதிகாரிகள் குழு பாலியல் ரீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் அச்சிட்டிருந்த நோட்டீஸ்களை பஸ்ஸ்டாண்டு உட்பட பொது இடங்களுக்கு சென்று மக்களிடம் நேரடியாக விநியோகித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!