என்னையா கலெக்டர் ஆபீஸ் இப்படி இருக்கு.. ஆய்வு செய்த கலெக்டர் அதிகாரிகளிடம் கண்டிப்பு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேங்கி கிடந்த குப்பைகள் (கலெக்டர் ஆய்வுக்கு முன்)
தேனி கலெக்டர் அலுவலகத்தை சுற்றிப்பார்த்த கலெக்டர் முரளீதரன்,'என்னையா ஆபீஸ் இவ்வளவு மோசமாக இருக்கு, சுத்தமா வையுங்க' என கோபத்துடன் கண்டித்தார்.
தேனி கலெக்டர் முரளிதரன் பொறுப்பேற்று மூன்று மாதம் ஆகிறது. மாவட்டம் முழுவதும் ஆய்வுக்கு சென்று வருகிறார். நேற்று காலை திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார். சுத்தப்படுத்தப்படாத, துர்நாற்றம் வீசும் பாத்ரூம்கள், சுவர்களில் எச்சில் கறை, இதர கறைகளை பார்த்தார். (நல்ல வேளை கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடிமகன்கள் இரவில் மது அருந்தி விட்டு பாட்டில்களை வீசி விட்டு செல்வார்கள். இன்று அதிர்ஷ்ட்ட வசமாக எந்த மதுபாட்டிலும் கலெக்டர் கண்ணில்படவில்லை). கலெக்டர் அலுவலகத்தின் வலதுபுறம் 20 அடி துாரத்திற்குள் குப்பை கொட்டி வைக்கப்பட்டு அசிங்கமாக இருந்தது. இதனை பார்த்த கலெக்டர் டென்சன் ஆகி விட்டார். (இதுக்கே டென்சன் ஆன கலெக்டர் மதுபாட்டில்களை பார்த்திருந்தால் அதிகாரிகள் நிலை அதோகதி தான்). 'என்னையாக இது கலெக்டர் அபீசா இல்லை... குப்பை சேமிக்கும் மைதானமா? இப்படி வெச்சுருக்கீங்க... இன்று மதியம் 3 மணிக்கு திரும்ப வந்து எல்லாத்தையும் பார்ப்பேன். அதற்குள் சுத்தப்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுத்து விடுவேன்' என அதிகாரிகளிடம் பொறிந்து தள்ளி விட்டார்.
திடீரென கேண்டீனுக்குள் சென்றவர், யாரும் மாஸ்க் போடாததை கண்டு அவர்களிடம் மாஸ்க் வழங்கி, மாஸ்க் இல்லாமல் யார் வந்தாலும், டீ, வடை, ஸ்நாக்ஸ், உணவு எதுவும் தராதீர்கள். நீ்ங்கள் டஸ்பின், மற்றும் கேண்டீனை முழு சுத்தமாக வையுங்க' என அறிவுறுத்தினார். அங்கிருந்த சிலர், அப்போது கலெக்டரை சந்திக்க முயன்றனர். அவர்களை தடுத்த அதிகாரிகள் சிலர், அவரே கோபத்தில் இருக்கிறார். அவர் கிட்ட போய் ஏதாவது சொல்லி நீங்களும் கலவரத்தை உருவாக்கி விடாதீங்க என தடுத்தனர். அதற்கு அவர்கள், சார், ஐயா கிட்ட சொல்லி தேனி நகர் பகுதியில் ஓட்டல்களுக்குள்ளும் திடீர் விசிட் வரச் சொல்லுங்க… என்றனர். நாங்கள் அய்யா கிட்ட சொல்லிர்றோம். நீங்கள் போங்க எனக்கூறி விட்டனர்.
கலெக்டர் ஆய்வு முடித்து புறப்பட்ட சில நிமிடங்களில் துப்புரவுப்பணியாளர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தை சுத்தம் செய்ய தொடங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu