தேனி மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., வீதி வீதியாக கொரோனா விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., வீதி வீதியாக கொரோனா விழிப்புணர்வு
X

தேனி மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே வீதி, வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து கலெக்டரும், எஸ்.பி.,யும் வீதி, வீதியாக சென்று கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளில் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் இணைந்து ஈடுபட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடையே விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. எவ்வளவு சொல்லியும், மக்கள் முககவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் கூட்டாக இணைந்து விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளது. கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே இருவரும் இணைந்து கூட்டாக விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம், போலீஸ் நிர்வாகம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உட்பட அத்தனை அரசுத்துறைகளும் இணைந்து விழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தெரு சந்திப்புகளில் தெருவோ விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அரசுத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்