தீபாவளி பஜாரில் சென்ற மக்களிடம் மாஸ்க் அணியுமாறு கலெக்டர் வேண்டுகோள்

தீபாவளி பஜாரில் சென்ற  மக்களிடம் மாஸ்க் அணியுமாறு  கலெக்டர் வேண்டுகோள்
X

ஆண்டிபட்டி பஸ்ஸ்டாண்டில் பஸ்சு்கு காத்திருந்த மக்களிடம் மாஸ்க் அணிய அறிவுறுத்திய கலெக்டர் முரளீதரன்.

ஒரே நாளில் பல நகராட்சிகளில் தீபாவளி பஜாருக்குள் சென்ற தேனி கலெக்டர் முரளீதரன் மாஸ்க் அணிய மக்களிடம் வலியுறுத்தினார்

தேனி, ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம் என ஒரே நாளில் கலெக்டர் முரளீதரன் பல்வேறு நகராட்சிப்பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்பகுதியில் உள்ள பஜார்கள், பஸ்ஸ்டாண்ட்களில் நின்று பொதுமக்களிடம் மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தினார். தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று சில நாட்களாக இல்லை என்றே தகவல்கள் வருகின்றன. அதற்காக கொரோனா ஒழிந்து விட்டதாக கருத முடியாது. இன்னும் சில மாதங்களுக்கு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இதுவரை இருந்த கட்டுப்பாட்டை இந்த தீபாவளி கொண்டாட்டம் சீர்குலைத்து விடக்கூடாது. எனவே மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட வேண்டுமென தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!