வினாடி வினா போட்டியில் வென்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

வினாடி வினா போட்டியில்   வென்றவர்களுக்கு கலெக்டர்  பாராட்டு
X
தேனியில் நடந்த வினாடி வினா போட்டியில் வென்று கலெக்டரிடம் பரிசு வாங்கிய மாணவ, மாணவிகள்.
பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் நடந்த கல்வியறிவு வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான தேனி கலெக்டர் பரிசு வழங்கினார்.

பாரத ரிசர்வ் வங்கி மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய 8 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான முதற்கட்ட வட்டார அளவிலான வினாடி வினா போட்டிகள் சென்ற வாரம் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டி கடந்த ஜூலை 10ம் தேதி அன்று நடைபெற்றது.

இப்போட்டியில் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் ரோஹித் குமார் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்று சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு தேனி கலெக்டர் ஷஜீவனா பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தி பாராட்டினார்.

மேலும், இரண்டாம் பரிசு பெற்ற கம்பம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஜெரினா யாஸ்மின், சஞ்சனா மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற போடிநாயக்கனூர் 10-வது நகரவை மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பாலமுருகன் மற்றும் சகிலா பானு ஆகிய மாணவர்களின் முயற்சியினை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பாரத ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் ரமேஷ், முன்னோடி வாங்கி மேலாளர் மோகன்குமார், மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி, நேர்முக உதவியாளர்கள் பெருமாள் சாமீ, மணிவண்ணன் மற்றும் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!