கை ரேகை வேண்டாம்.கையெழுத்து போதும்: தேனி கலெக்டர் அதிரடி உத்தரவு..

Tamil Vellum Signature
Tamil Vellum Signature-தேனி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னை காரணமாக கைரேகை பதிவாகவில்லை. இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு கலெக்டர் முரளீதரன் சமதர்மபுரம் வழியாக காரில் சென்றார். அங்குள்ள ரேஷன் கடையில் பலத்த கூட்டம் இருந்தது.உடனே காரை விட்டு இறங்கிய கலெக்டர் ஏன் இவ்வளவு கூட்டம் உள்ளது. என்ன பிரச்னை எனக்கேட்டார். ரேஷன் கடை பெண் பணியாளர் 'சார் சர்வர் பிரச்னை காரணமாக கையெழுத்து பதிவாகவில்லை' என்றார். அதற்கு கலெக்டர் இந்த பிரச்னை என் கவனத்திற்கு வந்தது. நான் அமைச்சரிடம் பேசினேன், மாநிலம் முழுவதும் இந்த சிக்கல் உள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார். அதனால் இனி சர்வர் பிரச்னை சரியாகும் வரை கைரேகை பதிய வேண்டாம். கையெழுத்து பெற்றுக் கொண்டு பொருட்கள் வழங்குங்கள். மக்களுக்கு தடையின்றி, துரிதமாக வழங்குங்கள் எனக்கூறினார்.
இதனை அறிந்த பெண்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் வரிசையில் நின்றிருந்த பெண்களிடம், 'உங்கள் வீட்டில் இன்று என்ன சமையல், காலையில் என்ன சாப்பிட்டீர்கள், ரேஷன் பொருட்கள் தரம் எப்படி உள்ளது. வேறு ஏதாவது குறை உள்ளதா? என கேட்டார். பெண்கள் சிரித்தபடி ஒரு குறையும் இல்லை. சார். ரேஷன் பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி சார் என்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu