18ம் கால்வாய், பி.டி.ஆர்., கால்வாய்களில் நீர் திறப்பு

18ம் கால்வாய், பி.டி.ஆர்., கால்வாய்களில் நீர் திறப்பு
X

கோப்பு படம்

லோயர் கேம்ப் அருகே உள்ள 18ம் கால்வாயில் ஒரு போக பாசனத்திற்காக தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இன்று தண்ணீரை திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள 18 ஆம் கால்வாய் தலை மதகில் இருந்து உத்தமபாளையம் மற்றும் போடி பகுதியில் உள்ள மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 44 கண்மாய்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடிநீர் மூலம் மறைமுகமாக பாசன வசதி பெறுவதற்காகவும், நேரடியாக 4 ஆயிரத்து 614.25 ஏக்கர் விளை நிலங்கள் ஒரு போக பாசன வசதி பெரும் வகையில் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு இன்று தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் இன்று தலைமதகு பகுதியிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, வட்டாட்சியர் அர்ஜுனன், உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பதினெட்டாம் கால்வாய் விவசாய சங்கத்தினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பி.டி.ஆர்., கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கால்வாயில் தொடர்ச்சியாக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 5150 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture