அங்கன்வாடி மையத்தில் குழந்தையாக மாறி விளையாடிய கலெக்டர் முரளீதரன்

அங்கன்வாடி மையத்தில் குழந்தையாக மாறி விளையாடிய கலெக்டர் முரளீதரன்
X

ராஜதானி அங்கன்வாடி மையத்தில் குழந்தையை துாக்கி விளையாடிய தேனி கலெக்டர் அந்த குழந்தையின் தாயிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.

அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த தேனி கலெக்டர் முரளீதரன், அங்கு விளையாடிய குழந்தையை துாக்கி விளையாடி மகிழ்ந்தார்.

தேனி கலெக்டர் முரளீதரன் இன்று, ராஜதானி அரசு கள்ளர்பட்டி, கள்ளர் சீரமைப்புத்துறையின் விடுதி, அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள அடிப்படை வசதிகள், உணவு வசதிகள், உணவின் தரம், மருந்துவ வசதிகள், தேவைப்படும் இதர வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

அங்கன்வாடி மையத்தில் ஒரு தாய் தன் குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையை துாக்கிய கலெக்டர் தானும் ஒரு குழந்தையைப் போல் விளையாடி, குழந்தையை மகிழ்வித்தார். அத்துடன் நிற்காமல், அந்த தாயிடம் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடு குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். கலெக்டரின் இந்த அன்பு கலந்த செயல்பாடு அந்த தாயை மட்டுமல்ல, அங்கன்வாடி மையத்தில் இருந்த அத்தனை பேரையும் நெகிழச்செய்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!