தேங்காய் கிலோ 25 ரூபாய் என சரிவு - விவசாயிகள் கவலை

தேங்காய் கிலோ 25 ரூபாய் என சரிவு - விவசாயிகள் கவலை
X

கோப்பு படம் 

தேனி மாவட்டத்தில், தேங்காய் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது சீசன் தொடங்கி உள்ளது. ஒரு தேங்காய் பெரியது விலை 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை மட்டுமே விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர். கிலோ 26 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர்.

சில்லரை மார்க்கெட்டில், முதல் தர தேங்காய் ஒன்று, 30 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. கிலோ 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளிடம் மிகவும் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனர். இதனால் தேனி மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து அதிகளவில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!