/* */

நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் கூடலுார் விவசாயிகள் முறையீடு

கூடலுாரில் குடிநீர் திட்ட கட்டுமானப்பணிகளை பார்வையிட வந்த நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் கூடலுார் விவசாயிகள் முறையீடு
X
கூடலுார் வந்த நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்டம், கூடலுார் முல்லைப்பெரியாற்றில் வண்ணான்துறையில் தடுப்பணை கட்டி அங்கிருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மாற்று வழிகள் மூலம் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பணை கட்டும் பணிகளை பார்வையிட, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, மதுரை மாநகராட்சி கமிஷனர், மதுரை மாநகராட்சி நிர்வாக பொறியாளர், பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கூடலுார் நகராட்சி அதிகாரிகள் இன்று வண்ணான்துறை வந்தனர். அங்கு இருந்த பாரதீய கிஷான் விவசாய சங்க தேனி மாவட்ட தலைவர் டாக்டர் சதீஷ்பாபு, கூடலுார் முல்லைச்சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன் உட்பட விவசாயிகள் அவர்களிடம் மனு கொடுத்தனர்.

மனுவில் இந்த திட்டத்தை தேனி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்படுத்த வேண்டும். இன்னும் 15 ஆண்டுகள் கழித்து ஏற்படும் தேவையினை கணக்கில் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் 15 ஆண்டுகள் கழித்து தேவை அதிகரிக்கும். இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியிருந்தனர்.

Updated On: 19 Jun 2022 3:38 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...