அருணாச்சலில் அடி வாங்கிய சீனா...

அருணாச்சலில் அடி வாங்கிய சீனா...
X

பைல் படம்

அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என சொல்லி உரிமை கொண்டாடுவதும் 72 ஆண்டு காலமாக சீனா நடத்தி வரும் அத்துமீறல் தான்

சீனாவின் இந்த செயல்பாட்டினை இதுவரை எந்த நாடும் கண்டிக்கவுமில்லை. அதுபற்றி பேசவுமில்லை. சிலர் நம்பிக்கொண்டிருப்பது போல சோவியத் யூனியனோ இல்லை இன்றைய ரஷ்யாவோ இதுபற்றி பேசியதே இல்லை, உண்மையில் அவர்களுக்கு கொள்கை கோட்பாட்டு அடிப்படையில் இன்னும் பலவகையில் சீனா தான் உற்ற நண்பன். இன்னும் இந்தியாவின் அணிசேரா கொள்கையும் இதற்கு காரணமாக இருந்தது, எந்த அணியிலும் இல்லாத இந்தியா எப்படியும் போகட்டும் என உலகநாடுகளும் கைவிட்டன.

மோடி ஆட்சியில் தான் இந்நிலை மாறுகின்றது. காஷ்மீரை உலக நாடுகளின் மௌனத்தோடு தன்னோடு சேர்த்த இந்தியா, இப்பொழுது இன்னொரு அதிரடியினை காட்டியிருக்கின்றது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என அமெரிக்கா மானசீகமாக ஏற்று அந்நாட்டு பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

இப்படி ஒரு தீர்மானம் அங்கு நிறைவேற்றபட்டால் அது இந்தியாவுக்கு பலமானது. ஐ.நா.வில் இது எதிரொலிக்கும் அமெரிக்காவின் தேசிய கொள்கையாகும். பின்னாளில் சீனா இப்பக்கம் போர்தொடுத்தால் இந்தியாவுக்கு எதிரான ஆக்கிரமிப்பாக அது கருதப்பட்டு பெருமளவில் அமெரிக்க உதவிகள் கிடைக்க வழிசெய்யும். 1962 போரிலே இதனை செய்யும் எண்ணம் இருந்தது. அமெரிக்க அதிபர் கென்னடி மறைமுகமாக இதற்கு விரும்பினார். அந்த போரில் அமெரிக்க தலையீடு வந்த பின்பே சீனா போரை நிறுத்தியது. ஆனால் அமெரிக்க யோசனையினை கேட்க நேரு தயங்கினார், சோவியத்தின் எதிர்ப்பை சந்திக்க அவர் தயாரில்லை மறுபடி அணிசேரா கொள்கையிலே புகுந்தும் கொண்டார். அதன் பின் சீனாவுக்கு அஞ்சி ரஷ்யாவிடம் இந்தியா பதுங்க, ரஷ்யா இந்தியாவின் முதுக்கு பின்னால் சீனாவோடு கைகுலுக்க இந்தியாவின் நிலை பரிதாபமானதாக பார்க்கப்பட்டது.. ஆனால் இப்பொழுது மோடி அரசு அதனை அடியோடு மாற்றியிருக்கின்றது

இனி அருணாசல பிரதேச விவகாரத்தில் சீனா பேசமுடியாது அதைவிட முக்கியமாக அங்கு புகுந்து விடலாம் என்பதை நினைத்து பார்க்கவும் முடியாது. மோடியின் ராஜதந்திரத்தில் தேசம் பெற்றிருக்கும் பெரும் நன்மை இது. அமெரிக்காவில் இந்த தீர்மானம் விவாதிக்கப்படும் நிலையில் இந்திய ஜனாதிபதி அருணாச்சல் பிரதேசம் செல்வார் என வந்திருக்கும் அறிவிப்பு சீனாவினை நாடி பிடித்தல்ல தாடி பிடித்து இழுத்து கேள்வி கேட்கும் விஷயம். ஆக சீனாவிற்கு எல்லா வகையிலும் இந்தியா வலுவான செக் வைத்துள்ளது.

இப்போதைய நிலையில் சீனா இந்தியாவின் மீது போர் தொடுப்பது குறித்து நினைத்து கூடப்பார்க்கவே முடியாது. சும்மா மிரட்டல் மட்டுமே விடும். ஆனால் அந்த மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா அஞ்சிய காலம் மலையேறி பல ஆண்டுகளாகி விட்டது. உண்மையினை சொன்னால் இப்போது இந்தியா தான் சீனாவினை மிரட்ட தொடங்கி உள்ளது. இதுவரை இந்தியாவினை நினைத்த நேரத்தில் ஆக்கிரமிக்க நினைத்த சீனா, இப்போது இரண்டு முறை இந்தியாவிடம் பலத்த அடி வாங்கி, பலநுாறு சீன வீரர்களை இழந்தும், ஒரு அடி கூட எல்லையில் முன்னேற முடியாமல் பரிதவித்து வருகிறது. இதனையும் உலகம் வேடிக்கை பார்த்தே வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!