தேனி மாவட்டம் போடி, சின்னமனூர் தேவதானப்பட்டியில் தொடர் திருட்டு

தேனி மாவட்டம் போடி, சின்னமனூர்  தேவதானப்பட்டியில்  தொடர் திருட்டு
X
தேனி மாவட்டத்தில் போடி, சின்னமனூர், தேவதானப்பட்டியில் தொடர்ந்து பல திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

தேனி மாவட்டம் போடி ரெங்கநாதபுரத்தில் ஒரே நாளில் ஆறு கடைகளை உடைத்து பணம், பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றனர். அதேநாளில் சின்னமனுாரில் முன்னாள் ராணுவவீரர் ஈஸ்வரன்(வயது 54 )வங்கியில் எடுத்து வந்து தனது டூ வீலரில் வைத்திருந்த 3.40 லட்சம் ரூபாய் பணத்தை திருடி விட்டனர். அதேபோல் தேவதானப்பட்டியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கோயில்களை உடைத்து, அங்கிருக்கும் விலை மதிப்பு மிகுந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இப்படி அடுத்தடுத்து நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களால், தேனி மாவட்ட மக்கள் மத்தியில் அச்ச உணர்வு தோன்றி உள்ளது. தொடர்ச்சியாக ஒரு வாரம் வரை போலீசார் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். இதனை கூர்ந்து கவனித்த திருடர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கிடைத்துள்ள பல்வேறு தடயங்களின் அடிப்படையில் திருடர்களை தேடும் பணி நடந்து வருகிறது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்