பலப்பரீட்சையில் தோற்ற சீனா... தற்போதைய குழப்பத்திற்கு காரணம் என்ன

பலப்பரீட்சையில் தோற்ற சீனா...  தற்போதைய குழப்பத்திற்கு காரணம் என்ன
X

பைல் படம்

சீனாவின் அசைக்க முடியாத சக்தியான ஜிங்ஜின்பிங் நீக்கப்பட்டு லீ குவாமிங் கைக்கு மாறிவிட்டதாக? தகவல்கள் வெளியாகின்றன.

சீனாவின் அதிபர் சீன கம்யூனிஸ்ட் கட்சின் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். அங்கு ஜனநாயகம் எல்லாம் கேலிக்குரிய விஷயம். மக்கள் எல்லாம் டம்மி பீஸ். ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்து இரண்டாவது பதவிக்காலம் முடிகிறது. அங்கு உள்ள கம்யூனிச சட்ட திட்டங்களின்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேலே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் நிரந்தர அதிபர் ஜி ஜின்பிங் என்று சொல்லும் அளவிற்கு அவரின் கை ஓங்கி இருந்தது. அது மட்டுமல்ல, ஜி ஜின்பிங் தன்னை எதிர்ப்பவர்களை குற்றம் சாட்டி, தூக்கு தண்டனை உட்பட கடும் தண்டனைகளை கொடுத்து காணாமல் ஆக்கி விடுவார் என்ற செய்தியும் உலா வருகிறது.

ஜி ஜின்பிங் சீனாவின் உச்சம் தொட்ட அதிபர் என்றளவில் மிகப்பரவலாக அவரின் அடக்குமுறை பேசப்பட்டது. "இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்", என்றளவில் மிகப்பெரிய தொழில் அதிபர்கள் முதல், அரசு அதிகாரிகள் வரை அடக்கப்பட்டார்கள். அவரின் காலத்தில் உலக அரசியலில் சீனா தன்னை உலகத்தின் அடுத்த வல்லரசாக அவசரப்பட்டு பறை சாற்றிக்கொள்ள தொடங்கியது. அது மட்டுமில்லாமல் பல அண்டை நாடுகளுடன் தனது சர்வாதிகாரத்தை பிரயோகித்து ஆக்கிரமிப்பு செய்து வந்தது. இன்று வரை அதன் எல்லை பிரச்னைகள் 17 நாடுகள் வரை விரிந்தது.

பொதுவாக அது போன்ற நேரங்களில் வல்லரசான அமெரிக்கா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி செய்து தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும். ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் மிக முக்கியமான சப்ளை செயின் என்கிற நிலையில், சீனா தவிர்க்க முடியாத சக்தியாக இருந்ததாலும், சீனா தன்னிடம் மிக பலமான ராணுவம் இருப்பதாக பறை சாற்றியதாலும், அமெரிக்காவின் மீது வியட்நாம் போன்ற நாடுகளுக்கு நம்பிக்கை இல்லாததாலும் அமெரிக்கா சீனா விஷயத்தில் சற்று அடக்கியே வாசித்தது.

இந்த நிலையில், சீனா-பூடான் எல்லையில் டோக்லகாம் எனும் இடத்தில் சீனா எல்லை மீறிய போது, இந்திய படைகள் தடுத்தது. இதனை சற்றும் எதிர்பாராத சீனா, இந்தியாவின் பலமான எதிர்ப்பால் பின் வாங்கியது. இது சீனாவின் ராணுவ வலிமைக்கு பெருத்த அடியாக மட்டுமில்லாமல், அதன் அதிபரின் தனிப்பட்ட கௌரவ இழப்பாகவும் பார்க்கப்பட்டதால், இந்தியாவை பழி வாங்க சந்தர்ப்ப சூழ்நிலைக்காக காத்திருந்தது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக அதிக அளவில் இருந்தபோது சப்தமில்லாமல் லடாக்கில் இருந்த LAC ஒப்பந்தத்தை மீறி சப்தமில்லாமல் ஆக்கிரமித்தது.

அங்கே ஒத்துக்கொள்ளப்பட்ட எல்லைக்கு இருபுறமும் 1.5 கிமீ தூரத்தில் இந்திய, சீன ராணுவங்கள் இருக்க வேண்டும் என்பது புரிந்துணர்வு ஒப்பந்தம். ஆனால் சீனா இந்த ஒப்பந்தத்தை மீறி 1.5 கி.மீ., முன்னேறி, LAC யில் ஆக்கிரமித்தது. இந்த ஆக்கிரமிப்பை அறிந்து இந்திய ராணும் தடுத்தது. இந்திய ராணுவ வீரர்கள் அளவு 80 பேர் மட்டும் இருக்க, ஏறத்தாழ 380 பேருக்கு மேல் இருந்த சீன ராணுவத்துடன் கை கலப்பு ஏற்பட்டது. இந்த கைகலப்பில் இந்திய ராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பை விட 4 மடங்கு இழப்புகளை சீனா சந்தித்தது. இதனை சீனாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதில் தான் சீன ராணுவத்தின் உண்மையான பலவீனம் உலகுக்கு வெட்ட வெளிச்சமானது.

அதற்கு பின்பு பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தது. அதாவது இந்திய ராணுவம் 3 கிமீ பின் வாங்க வேண்டும் என்பது தான் சீனாவின் எதிர்பார்ப்பு. அதன் மூலம் சீனாவிற்கு 1.5 கிமீ அதற்கு எல்லைகள் புதியதாக விரியும் என்பது அதன் கணக்கு. இந்தியா இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சீனா தனது படைகளை பெருக்கியதன் மூலம் இந்தியாவை தாக்குவோம் என்றது. போர் விமானங்களை கொண்டு சென்றது. இது போன்ற மிரட்டல்களுக்கு பழைய காங்கிரஸ் அரசு அடிபணியும் என்பதால் அதைத்தான் இந்த மோடி அரசிடமும் எதிர்பார்த்தது. ஆனால் மோடி அரசு சீனாவிற்கு இணையான படைகளை எல்லையில் குவித்தது.

இந்திய ராணுவம் சீன ராணுவத்துடன் முழு போருக்கு தயாராகி, அங்கிருந்த 7 முக்கிய சிகரங்களை கைப்பற்றியது. ஆனால் சீன ரணுவத்திற்கு அது எதிர்பாராத, சமாளிக்க முடியாத சூழல். சீன ராணுவத்தில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு மடங்கு சம்பளம், சூடான, சுவையான சாப்பாடு என்றெல்லாம் ஆசை காட்டினாலும், கடும் குளிரில் சீன ராணுவம் திணறியது. பலர் உடல் நலமின்றி, இறந்தும் போக, புதியதாக யாரும் அங்கு செல்ல விரும்பவில்லை.

இந்த சூழலில், சீனாவின் அத்து மீறல்களாலும், தேவையற்ற உரசல்களாலும், கொரானாவுக்கு பிறகு பல பிரச்சுனைகளை சீனா சந்திக்க நேர்ந்தது. சீனாவின் தொழில்கள் நசிந்து இந்தியா போன்ற நாடுகளுக்கு சென்றன. சீனாவில் ரியல் எஸ்டேட் தொழில்கள் முடங்கி, அதன் பொருளாதாரம் தேக்கமடைந்தது. அது மட்டுமில்லாமல் தரமில்லாத தடுப்பூசியால், சீனாவில் மீண்டும், மீண்டும் கொரோனா தாக்கிது. அங்கு கடுமையான ஊரடங்குகளை போட்டதால், பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது.

அளவுக்கு அதிகமான சில்க் ரோடுகள் என்றளவில் உலகம் முழுவதும் போடப்பட்ட அதன் முதலீடும், அது ஏழை நாடுகளுக்கு கடுமையான வட்டிக்கு கொடுத்த கடனும் திரும்பி வராததால், அதுவும் கோவிந்தா. இந்தியாவை உளவு பார்க்க இலங்கை ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு வந்த சீனக்கப்பல், இந்தியா நடத்திய தொழில்நுட்ப போரால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த கப்பலின் திட்டமிடப்பட்ட பயணம் ரத்தாகி மீண்டும் சீனாவிற்கே திரும்பிய போது உலகமே சிரித்தது.

தைவான் பிரச்னையில் வழக்கம்போல அதன் மிரட்டல்கள் வேலை செய்யாமல் போக, சீனா பல புதிய அத்து மீறல்களை போர் பயிற்சி என்றளவில் சைக்காலஜிக்கல் டார்ச்சர் செய்தது. கடைசியில் தைவானுக்காக சீனாவினை எதிர்த்து அமெரிக்கா போரில் குதிக்கும் என்று அமெரிக்க அதிபர் சொல்லி விட்ட சூழலில், சீனாவின் அந்தஸ்து உலகளவில் பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் சீனாவின் அடுத்த அதிபர் மேல்நிலை கம்யூனிஸ்ட்டுகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்காக சீனா தன் இழந்த இமேஜை மீட்டெடுக்க பல வித ஜெகஜாலங்களை செய்ய, அது ஒவ்வொன்றும் தோல்வியில் முடிய, மேலும் அதிபரின் இமேஜ் டோட்டலி டேமேட்ஜ் ஆகிவிட்டது.

ஜி ஜின்பிங்குக்கு போட்டியே இல்லை என்ற சூழலில், சீன ராணுவத்தின் லீ க்யோமிங், கைக்கு அதன் அதிகாரம் மாறத் தொடங்கியது. அதனால் ஜின்பிங் வெளியே வருவது என்பதே அரிதாகி, கடைசியாக SCO மாநாட்டில் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி, அவரை கண்டு கொள்ளவே இல்லை. இது உலகளவில் மிகப்பெரிய செய்தியாக பார்க்கப்பட்டது. அதற்கு காரணம், சீனாவின் அதிகாரம் அவர் கையை விட்டு போய்விட்டது, இன்று அவர் செல்லாக்காசு என்பதை இதன் மூலம் மோடி உலகிற்கு உணர்த்தியதாக செய்திகள் உலாவின.

இந்த சூழலில், மாநாட்டில் இருந்த திரும்பியவரை சீன ராணுவம் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது. அது மட்டுமல்ல, சீனாவின் விமான சேவைகள் முடக்கப்பட்டது. இப்போது ரயில் சேவைகளும் நிறுத்தப்படுவதாக செய்திகள் வருகிறது. கிட்டத்தட்ட ஜி ஜின்பிங்கின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. அத்தோடு சீனாவின் வல்லரசு கனவும், வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. ஜி ஜின்பிங் மீண்டும் வருவாரா? அல்லது ராணுவ ஆட்சியா? இல்லை வேறு அதிபரை கொண்ட கம்யூனிஸ்ட் ஆட்சியா? என்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது