தேனியில் செஸ் போட்டிகள்: தொடங்கி வைத்த ஆட்சியர்

தேனியில் நடந்த செஸ்ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டிகளில் கலெக்டர் முரளீதரன் (நீலக்கலர் சட்டை அணிந்திருப்பவர்) பங்கேற்றார். அருகில் ராயல் அரிமா சங்க பட்டயத் தலைவர் செல்வகணேசன் (சந்தனக்கலர் சட்டை) அணிந்திருப்பவர்.
சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதனை தொடர்ந்து தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், தொண்டு நிறுவனங்களின் சார்பிலும், தினமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விளம்பர பாதகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக தேனியில் தனியார் நட்சத்திர ஓட்டலில் தேனி மாவட்ட நிர்வாகம், தேனி ராயல் அரிமா சங்கம், தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற செஸ் போட்டிகள் நடந்தன. கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்.
ராயல் அரிமா சங்க பட்டய தலைவர் செல்வகணேசன் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் பாஸ்கரன், ரவீந்திரநாத், தொழிலதிபர்கள் சன்னாசி, முத்துகோவிந்தன், பாண்டியராஜ், ரமேஷ்குமார், சரவணன், ஜெயக்குமார், குலோத்துங்கன், தங்கராஜ் உட்பட பங்கேற்றனர்.300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu