தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் செஸ் போட்டி..!

தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் செஸ் போட்டி..!

தேனியில் நடந்த செஸ் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், சான்றிதழ்களுடன்.

தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் அதன் வளாகத்தில் நேற்று மாணவர்களுக்கான செஸ் போட்டிகள் நடைபெற்றன.

இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 47-வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளை தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி . நடத்த திட்டமிட்டது.

போட்டிகளானது 10 மற்றும் 14 வயது மாணவர்கள் அனைவருக்கும் பொது பிரிவு Open to all என மூன்று பிரிவுகளாக நேற்று (10ம் தேதி) காலை 10 மணி அளவில் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற வனச்சரகர் அமானுல்லா தலைமையேற்று போட்டிகளை துவக்கி வைத்தார்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அகாடமி செயலாளர் மாடசாமி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். போட்டி இயக்குனர் அஜ்மல்கான் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

ஆசிரியர் மேனகா நடுவராக செயல்பட்டார். வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்: Under - 10 பிரிவில் 1.S.J.மகேஸ்வரன் 2, B.சித்தேஷ் 3, P.ஜெகதிஸ்விஸ்வா 4,M.தேகந்5, A.சந்தோஷ் 6,M. லேகேஷ் சக்தி. 7,R.ரக்ஷிக்கா 8, P.K.தன்யாஸ்ரீ 9, R. இஷான் 10, J.தியாஸ்ரீ ஆகியோரும்,

Under - 14 பிரிவில் 1.J.S.தரனேஸ்வரன், 2,S.ரகுநாத் 3,V. தரணிக்கா ஸ்ரீ 4,S.பரணி, 5.A.சந்தோஷ் பாண்டியன் 6,B.சுஜய் 7, P.விஷால் 8, K.அஸ்வத் 9, R.பரத்10. S.G.காவியன் ஆகியோரும்,

Open to all பிரிவில் 1.C. விஷ்வா 2, T.சரவணன், 3, C பிரணவ், 4,S.J. தரணிஸ்வரன் 5,S.சாம்செரின்ராஜ் 6,S. விசாகன் 7,S. வரதன் 8, K.திருமுருகன். 9, V. தரணிக்காஸ்ரீ 10.P.அன்பரசன், வெற்றிபெற்றனர்.

வெற்றிபெற்று சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Tags

Next Story