சென்னை- கோட்டயம் ரயில் நேரங்களில் மாற்றம்..!
ரயில் (கோப்பு படம்)
சபரிமலை சீசனையொட்டி, சென்னையில் இருந்து கேரள மாநிலம், கோட்டயத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடா்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நவம்பா் 26, டிசம்பா் 3, 10, 17, 24, 31 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்படும் சென்னை - கோட்டயம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06027) மறுநாள் பிற்பகல் 1.30 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.
கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து நவம்பா் 27, டிசம்பா் 4, 11, 18, 25 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயிலானது. மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலானது, பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் வடக்கு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் என தெரிவித்திருந்த நிலையில், மாற்றாக இரவு 8.45 புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu