சின்னமனூர் அருகே அடகு பெற்ற நகைகளை மறு அடமானம் வைத்து மோசடி

சின்னமனூர் அருகே அடகு பெற்ற நகைகளை  மறு அடமானம் வைத்து மோசடி
X
சின்னமனுார் அருகே சுக்கான்கல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் அடமானம் வைத்த நகைகளை தனியார் பைனான்சில் மறு அடகு வைத்தும், பல லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் அருகே சின்னமனுார் சுக்கான்கல்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 317 நகைகளை அடகு வைத்துள்ளனர். இவர்களில் 52 பேரின் நகைகளை காணவில்லை. இந்த நகைகளை தனியார் பைனான்சில் கூடுதல் பணத்திற்கு மறு அடகு வைத்து விட்டனர்.

தவிர விவசாயிகள் டெபாஸிட் செய்த பணத்தில் இருந்து கடன் பெற்றது போல் போலி கையெழுத்து போட்டு பல லட்சம் ரூபாய் பணம் எடுத்துள்ளனர். பலர் நகைகளை திருப்பியது போல் போலி கையெழுத்து போட்டு எடுத்து விற்று மோசடி செய்துள்ளனர். இந்த முறைகேடு மீது நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதை தொடர்ந்து சங்க செயலாளர் முத்துராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தமபாளையம் துணைப்பதிவாளர் சலீம் தலைமையிலான குழுவினர் வங்கியில் அடகு வைத்த நகைகளை சரிபார்த்து மதிப்பீடு செய்து வருகின்றனர். டெபாஸி்ட்சிட்டில் போலி கையெழுத்து போட்டு கடன் பெற்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!