கூடலுார் நகராட்சிக்கு அ.தி.மு.க.வின் சேர்மன் வேட்பாளர் பா.லோகநாயகி

கூடலுார் நகராட்சியின் சேர்மன் வேட்பாளர் பா.லோகநாயகி வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சி 16வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் பா.லோகநாயகி இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்கி உள்ளார். ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வரும் லோகநாயகி, படிக்கும் காலத்திலேயே அரசியலுக்கு வந்துள்ளதால், இவரிடம் என்ன சொல்லி அ.தி.மு.க., களம் இறக்கி உள்ளது என்ற சந்தேகம் வாக்காளர்கள் மத்தியில் இருந்தது.
இதற்கு ஏற்ப அ.தி.மு.க.வினரும் 'உங்கள் ஓட்டு சாதாரணமானது இல்லை. மிகுந்த மகத்துவம் வாய்ந்தது. விரைவில் உங்களுக்கு அது புரியும். உங்களுக்கு 'சர்ப்ரைஸ்' காத்திருக்கிறது என நுாதன பிரச்சாரம் செய்தனர். இது பற்றி 16வது வார்டு மக்களிடம் விவாதம் நடந்து வந்தது.
இந்நிலையில், இன்று அ.தி.மு.க.வினர் பா.லோகநாயகிதான், கூடலுார் நகராட்சியின் அ.தி.மு.க.வின் சேர்மன் வேட்பாளர். எனவே நீங்கள் ஒரு ஓட்டில் ஒரு கவுன்சிலரையும், ஒரு சேர்மனையும் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். உங்கள் வார்டு சேர்மன் வார்டாக பெருமை பெற போகிறது என இதுவரை மறைத்து வைத்திருந்த ரகசியத்தை வெளிப்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu