சகிப்புத்தன்மையை எடுத்துக்காட்டும் வெள்ளித்திரை செல்லுலாய்டு

பைல் படம்
1921 ஆம் ஆண்டு கிலாஃப்த் இயக்கத்தை காந்தி ஆதரித்ததால் காங்கிரஸ் கட்சியும் ஆதரித்தது. போராட்டத்தை அடக்கி ஒடுக்கியது ஆங்கிலேய அரசு. போராட்டம் பிசுபிசுத்துப் போனது. கிலாஃப்த் படுதோல்விக்கு எதிரான கோபத்தை, ஆத்திரத்தை ஆங்கில அரசுக்கு எதிராக காண்பிக்க வேண்டியவர்கள், அதற்கு துணிச்சல் தைரியம் இல்லாமல் அப்பாவி ஹிந்துக்கள் மீது காண்பித்து வன்செயல்களில் ஈடுபட்டனர்.
கேரளாவில் கோழிக்கோடு போன்ற பகுதிகளில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு ஹிந்துக்களுக்கு கொடுமைகள் இழைத்தனர். முஸ்லீம் லீக் கட்சியினரும், அடிப்படைத் தீவிரவாத முஸ்லிம்களும். பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்கள் கட்டாய மத மாற்றத்திற்கு ஆளாக்கினர். ஆயிரக்கணக்கில் ஹிந்துக்கள் மனசாட்சியின்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்கள் உயிர் தப்பி வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இது போன்ற கொடுமைகள் கேரளத்தின் வடக்குப் பகுதிகளில் நடைபெற்றது. நமது சரித்திரப் பாடப் புத்தகத்தில் இவைகளைப் பற்றிய ஒரு சிறு தகவல் கூடக் கிடையாது.
அக்கலவரத்தில் உயிர் தப்பிப் பிழைத்த குடும்பங்களில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் குடும்பமும் ஒன்றாகும். ஆனால் இஎம் எஸ். இப்போராட்டதை நிலவுடமைக்காரர்களுக்கு எதிராக விவசாயக் கூலித் தொழிலாளர்கள் செய்த கிளர்ச்சி என்று நூல் எழுதி வெளியிட்டுள்ளார். இப்படித்தான் வரலாற்றைத் திருத்தி எழுதுவதில் கம்யூனிஸ்டுகள் கை தேர்ந்தவர்கள். 1921 ஆம் ஆண்டில் கேரளத்தில் நடை பெற்ற நிகழ்வுகளை மையக் கருத்தாகக் கொண்டு அக்பர் அலி என்ற ராமசிம்ஹன் 'புழ முதல் புழு வர எனும் திரைப்படம் தயாரித்து இயக்கியுள்ளார்.
தணிக்கைச் சான்றிதழ் வழங்கிடாமல் இழுத்தடிப்பு. எத்தனையோ இடையூறுகள். முக்கிய காட்சிகளை வெட்டி எறியச் சொல்லி உத்தரவு. நீதி மன்றம் சென்று படத்தைத் திரையிட உத்தரவு பெற்றுள்ளார் தயாரிப்பாளர் அக்பர் அலி. மார்ச் 3ம் தேதி கேரளாவில் திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
படவிளம்பர பேனர்கள் ஃப்லெக்ஸ் ஃபோர்ட்கள் மாநில மெங்கும் வைக்கப் பட்டுள்ளன. சகிப்புத் தன்மையைப் பற்றி மூச்சுக்கு 30 தடவை பேசி வருபவர்களால் படத்தின் விளம்பரத்தைக் கூட சகித்துக் கொள்ள இயலவில்லை. ஆனால் ஹிந்துக்களுக்கு சகிப்புத் தன்மை பற்றி பாடம் எடுக்கத் தவறுவதில்லை.
விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் ‘ படத்தைப் போன்று மறைக்கப்பட்ட உண்மை வரலாற்றை மையக் கருவாகக் கொண்டு தயாரித்து இயக்கியுள்ளார் அக்பர் அலி எனும் ராமசிம்ஹன். அக்பர் அலியாக இருந்தவர் அண்மை யில் தான் இஸ்லாத்தைத் துறந்து ராம சிம்ஹனாக சனாதன தர்மப் பாதையில் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருகின் றார். ஹிந்துக்கள் அனைவரும் காண வெண்டியதொரு திரைப்படம் இது. படத்தைப் பார்த்து மறைக்கப்பட்ட சரித்திரத்தை தெரிந்து கொள்வோம
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu