மேகமலையில் 150 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைப்பு..!
மேகமலையில் உலாவரும் யானைகள்
தேனி மாவட்டத்தில் வனப்பகுதியை கண்காணிப்பதற்கு பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேனி மாவட்டத்தில் மேகமலை வனப்பகுதி மட்டும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் உள்ளது. இங்கு புலி, யானைகளை கணக்கெடுக்கவும், அவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் 48 இடங்களில் வனத்திற்குள் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. தவிர வனப்பகுதியை சுற்றிலும் வேட்டையினை தடுக்கவும், மரம் கடத்தலை தடுக்கவும் கடத்தல்கள்காரர்கள் பயன்படுத்தும் பாதைகளில் மட்டும் 150 கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை கடத்தல்காரர்கள் எடுத்துச் சென்று விட்டனர். எனவே இம்முறை கேமரா வைக்கப்பட்டுள்ள இடத்தை கடத்தல்காரர்கள் கண்டறிய முடியாத வகையில் அமைத்துள்ளனர். இந்த கேமரா இரவிலும் கூட துல்லியமாக படம் எடுக்கும். எனவே கடத்தல்காரர்கள் யார் என்பதை அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.
வனத்தை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. தவிர போலீஸ் துறையில் உளவுப்பிரிவு இருப்பதை போல், வனத்துறையிலும் உளவுப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த உளவுப்பிரிவில் யார் பணியாற்றுகின்றனர் என்பது உயர் அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே தெரியும். இதன் மூலம் தவறுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளும் சிக்குவார்கள். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu