காவிரி நதிநீர் திறப்பு வழக்கு திங்கள்கிழமை விசாரணை

காவிரி நதிநீர் திறப்பு வழக்கு  திங்கள்கிழமை விசாரணை
X

பைல் படம்

காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி அரசு தொடர்ந்த வழக்கு திங்கள்கிழமை விசாரிக்கப் படவுள்ளது

காவிரி நீர் தொடர்பாக தாக்கல் செய்த இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு முறையீடு செய்தது. காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்யாததாலும், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததாலும் 5 லட்சம் ஏக்கரில் பயிர் பாதிக்கப் பட்டுள்ளது. ஜூன், ஜூலை வரை தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டிய 28.8 டிஎம்சி நீரை திறந்து விட கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதத்துக்கு உண்டான 45 டிஎம்சி நீரை இம்மாத இறுதிக்குள் திறந்து விட வேண்டும் என்றும் செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய 36.76 டிஎம்சி நீரை உரிய நேரத்தில் திறந்து விடவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தண்ணீர் இன்றி பயிர் கருகுவதால் கர்நாடக அரசு காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கனஅடி நீர் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு இடையீட்டு மனுத் தாக்கல் செய்தது. இடையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

பட்டியலில் இணைக்கப்படாமல் முறையீட்டை எவ்வாறு ஏற்பது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். முறையீட்டு பட்டியலில் இணைக்க பதிவாளரிடம் கோரிக்கை வைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

Tags

Next Story
why is ai important to the future