ஜாதிவாரி கணக்கெடுப்பு : வெல்பேர் கூட்டத்தில் தீர்மானம்..!

ஜாதிவாரி கணக்கெடுப்பு :  வெல்பேர் கூட்டத்தில் தீர்மானம்..!
X

தேனியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு  அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வெல்பேர் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அதிகாரம் பெற்றிடவும் சமூகநீதி காத்திடவும் கணக்கெடுப்பு தேவை என்பதை மையப் பொருளாகக் கொண்டு தேனி மாவட்ட வெல்ஃபேர் கட்சி சார்பில் தேனி மக்கள் சேவை மையத்தில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி, திண்டுக்கல் மண்டல செயலாளர் தமிழ்வாணன் தலைமை வகித்தார். வெல்ஃபேர் பார்ட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது சபி வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, எஸ்.டி.பி.ஐ., மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்திக், மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் பொன்முடி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.

ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் நீலக்கணலன், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஐயுஎம்எல் மாவட்ட செயலாளர் சர்புதீன், திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் கண்ணன், திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஹக்கீம், தேனி புதுப்பள்ளி ஜமாத் துணைத் தலைவர் ஹபிபுல்லா, இணைந்தெழு தமிழ்நாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகணேஷ், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் செல்லான், முல்லை முருகன், குச்சனூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் அஜ்மீர் கான், விசிக செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல் ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் சமூக நல்லிணக்க பேரவை பொருளாளர் குழந்தைராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் பாபு, தேனி புது பள்ளிவாசல் முன்னாள் செயலாளர் முகமது பாட்சா, மமக நகரச் செயலாளர் ஷேக் முகமது, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தேனி கிளைத்தலைவர் அபுதாகிர் ராஜா, தேனி மக்கள் சேவை மைய தலைவர் காதர் பிச்சை, சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் மாவட்ட செயலாளர் சபியுல்லா, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

கலந்துரையாடலின் நிறைவில் பீகாரை முன்மாதிரியாக கொண்டு தமிழக அரசும் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழக அரசுக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. வெல்ஃபேர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேனி ஜாஹிர் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு