பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
X

முல்லைப்பெரியாறு அணை.

முல்லைபெரியாறு அணை நீர் கடந்த இரண்டு நாட்களாகவே 135.90 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அணை நீர் மட்டம் 136.30 அடியை எட்டினால் கேரளா வழியாக நீர் திறக்க வேண்டும். தமிழகம் வழியாக குறிப்பிட்ட அளவு மட்டுமே நீர் எடுக்க முடியும். ரூல்கர்வ் அமல்படுத்த தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்த நிலையில், மழை குறைய தொடங்கியது. இதனால் நீர் வரத்தும் குறைந்தது. இதனை தொடர்ந்து நீர் மட்டம் கடந்த இரண்டு நாட்களாகவே 135.90 அடி உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 1879 கனஅடி நீர் வருகிறது. வரும் நீர் முழுக்க தமிழகப்பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது.

இதற்கிடையில் பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையினை அமல்படுத்தக்கூடாது என இந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா