300 அடி பள்ளத்தில் கார் உருண்டு விபத்து: 3 பேர் உயிரிழப்பு

300 அடி பள்ளத்தில் கார் உருண்டு விபத்து: 3 பேர் உயிரிழப்பு
X
கொடைக்கானல் மலைப்பாதையில் 300 அடிபள்ளத்தில் கார் உருண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்

கொடைக்கானல் மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் நள்ளிரவில் கார் உருண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

மதுரை மாவட்டம் சமயநல்லுாரை சேர்ந்த கோகுல்( 30.) இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவந்தார். இவர் தனது மனைவி நந்தினிபாரதி(27,) மகள் மூன்று மாத குழந்தை தனயாழினி, மைத்துனர் கார்த்திகேயன், மாமியார் அழகுராணி( 48) ஆகியோருடன் காரில் கொடைக்கானல் சென்றிருந்தார். அங்கு தீபாவளி கொண்டாடி விட்டு, தேனி மாவட்டம், டி.சுப்புலாபுரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு ஒரு மணிக்கு அடுக்கம் மலைச்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

கிழவிபாறை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நந்தினிபாரதி, 3 மாத குழந்தை தனயாழினி, அழகுராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் நள்ளிரவே இவர்களது உடல்களை மீட்டனர். கோகுல், கார்த்திகேயன் காயத்துடன் மீட்கப்பட்டு தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story