கூரியர்களில் கடத்தப்படும் கஞ்சா, புகையிலை: டி.ஐ.ஜி., தேனி எஸ்.பி., அறிவுரை

கூரியர்களில் கடத்தப்படும் கஞ்சா, புகையிலை:  டி.ஐ.ஜி., தேனி எஸ்.பி., அறிவுரை
X

பைல் படம்.

கூரியர்களில் கஞ்சா, புகையிலை கடத்தப்படுவது குறித்து விழிப்புடன் இருப்பது குறித்து கூரி்யர் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி எஸ்.பி., அலுவலகத்தில் கூரியர்கள், பார்சல்களில் கஞ்சா கடத்தப்படுவதாக புகார் வந்ததால் திண்டுக்கல் டி.ஐ.ஜி., விஜயகுமாரி, தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே கூரியர் நிறுவனங்களின் உரிமையாளர்கள், மேலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினர்.

அவர்களுக்கு பார்சல்கள், தபால்களை எப்படி கையாள்வது, சந்தேகம் ஏற்படும் பார்சல்கள் குறித்து எப்படி போலீசாருக்கு தகவல் தருவது, எந்தெந்த பகுதியில் எந்தெந்த அதிகாரிகளுக்கு தகவல் தருவது போன்ற விவரங்களை வழங்கினர். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தனிப்படை போலீசாரின் விவரங்களையும் வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!