கஞ்சா மற்றும் போதை பொருள் ஒழிக்கப்படுமா ?

கஞ்சா மற்றும் போதை பொருள் ஒழிக்கப்படுமா ?
X

போதைப்பொருள் தடுக்கப்படல் வேண்டும்.(கோப்பு படம்)

பெரியகுளம் தேவதானப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில், கஞ்சா, மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான சாத்தாகோவில்பட்டி, மஞ்சளாறு, செங்குளத்துப்பட்டி, காமக்காபட்டி, கெங்குவார்பட்டி, மற்றும் கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் மிகவும் தாராளமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு மிக எளிதாக கிடைக்கிறது.

கஞ்சா விற்பதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கஞ்சா கும்பல் மற்றும் கூலிப்படை கும்பல் இணைந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்தும் மற்றொருவரை வெட்டி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தாராளமாக கஞ்சா மற்றும் மது எப்படி கிடைக்கிறது என்பது காவல்துறைக்கே வெளிச்சம் ?

மேலும் குடிகாரர்களுக்கு சிறப்பு சேவையாக 24 மணி நேரமும் கல்லுப்பட்டி மற்றும் கெங்குவார்பட்டியில் எப்போதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள இரண்டு மதுபான கடைகளிலும் காலை நான்கு மணிக்கு விற்பனையை பாரில் துவங்கி இரவு இரண்டு மணி வரை பாரில் (அரசு அனுமதி பெறவில்லை)நடத்தி வருகின்றனர். ஆதலால் காவல்துறை தன் இரும்பு கரம் கொண்டு கஞ்சா மற்றும் போதை பொருள் கும்பலை ஒழிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

போதைப்பொருட்களால் இளம் தலைமுறை சீரழிந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் போதைப்பொருள் பயன்பாடுகளை இளைஞர்கள் மிக எளிதாக அறிந்துவிடுகிறார்கள். இது நமது சமூக சீரழிவுக்கு காரணமாக அமைந்துவிடும். சரியான திட்டமிடுதலில் காவல்துறை போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை சிறையில் சடைக்கவேண்டும்.

மேலும் இந்த இளைய சமூகம் சீரழிந்துவிடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அதற்கான ஆலோசனைகள் வழங்கபப்டுவது அவசியம் ஆகும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!