/* */

இன்றுடன் நிறைவடைகிறது வேட்புமனு தாக்கல்: கட்சியினருக்கு நேரம் ஒதுக்கிய போலீசார்

இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைவதால், பிரச்னைகளை தவிர்க்க கட்சியினருக்கு போலீசார் நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

இன்றுடன் நிறைவடைகிறது வேட்புமனு தாக்கல்: கட்சியினருக்கு நேரம் ஒதுக்கிய போலீசார்
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுதாக்கல் இன்று நிறைவடைவதால், தேனி மாவட்டத்தில் முக்கிய கட்சியினர் எந்தெந்த நேரத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என போலீசார் நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. மனுக்களை திரும்ப பெற பிப்., 7ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அன்று மாலையே இறுதிப் பட்டியல் வெளியாகும்.

இந்நிலையில் இன்று கடைசி நாள் என்பதால் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ., காங்., எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மனுதாக்கல் செய்ய உள்ளன. இவர்கள் ஒரே நேரத்தில் குவிந்தால் தேவையற்ற சலசலப்பு ஏற்படும். குறிப்பாக உத்தமபாளையம், கம்பம், கூடலுார் பகுதியில் பா.ஜ.,வும் எஸ்.டி.பி.ஐ., கட்சியினரும் ஒரே நேரத்தில் வந்து விடக்கூடாது என்பதில் போலீசார் கவனமாக உள்ளனர். எனவே ஒவ்வொரு ஊரிலும் எந்தெந்த கட்சிகள் எப்போது மனுதாக்கல் செய்ய வேண்டும் என போலீசார் அந்தந்த பகுதி கட்சி தலைவர்களிடம் பேசி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 4 Feb 2022 3:30 AM GMT

Related News