தேனி நகராட்சி 14வது வார்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்., வேட்பாளர்
தேனி நகராட்சி 14 வது வார்டு காங்., வேட்பாளர் நாகராஜூக்கு ஆதரவு கேட்டு அவரது உறவினர்கள் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் கொடுக்கின்றனர்.
தேனி நகராட்சியில் மட்டுமல்ல... மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட வார்டாக மாறி உள்ளது 14வது வார்டு. மொத்தம் இந்த வார்டில் மட்டும் 3830 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு போட்டியிடும் காங்., வேட்பாளர் நாகராஜ் தற்போது இரண்டாவது முறையாக போட்டியிட்டாலும், இவரது குடும்பத்தினர் சார்பில் கணக்கெடுத்தால் ஐந்தாவது முறையாக களம் இறங்கி உள்ளனர். தொடர்ந்து நான்கு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போது ஐந்தாவது முறையாக வெற்றி நோக்கி செல்கின்றனர். காரணம் இந்த வார்டில் உள்ள மெஜாரிட்டி மக்கள் தொகை இவர்களுடைய சொந்தங்கள் தான். அதுவும் இந்த குடும்பத்திற்கு உள்ள நற்குணங்கள் அத்தனை சமூகத்திடமும் நன்மதிப்பை பெற்றுள்ளது. என்ன தான் செல்வாக்கு இருந்தாலும் இந்த ஓட்டுக்களை தனது ஆதரவு பெட்டிக்குள் கொண்டு சென்று சேர்த்தால் மட்டுமே வெற்றியை எட்ட முடியும்.
வாக்காளர்கள் எண்ணிக்கை மிக, மிக அதிகமாக இருப்பதாலும், காங்., வேட்பாளர் நாகராஜ் வாக்காளர்களை அடையாளம் கண்டு கட்சி சார்பில் பூத் சிலிப் கொடுக்க தொடங்கி உள்ளார். இதற்காக தலா 5 பேர் கொண்ட 20 குழுக்களை அமைத்துள்ளார். இவர்கள் அத்தனை பேரும் சொந்தங்கள் என்பதால் இவர்களுக்கு சம்பளம் தர வேண்டிய அவசியமில்லை. இவர்கள் அத்தனை பேரும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், பணி முடித்து திரும்பிய பின்னர், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வாக்காளர்களை அடையாளம் கண்டு கட்சியினர் சார்பில் வழங்கப்படும் பூத் சிலிப்களை வழங்கி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu