/* */

வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து கால்வாயில் பாசனத்திற்காக அமைச்சர்கள் மூர்த்தி பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தண்ணீர் திறத்து வைத்தனர்

HIGHLIGHTS

வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய்  பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு
X

 வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர்.

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் தண்ணீர் திறந்து விட்டனர். தேனி கலெக்டர் முரளீதரன், திண்டுக்கல் கலெக்டர் விசாகன், மதுரை கலெக்டர் அனீஸ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் சரவணக்குமார், மகாராஜன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.அணையில் இருந்து விநாடிக்கு 150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 13 Nov 2021 8:00 AM GMT

Related News