/* */

பெரியாறு அணையில் இனி 142 அடி தண்ணீர் தேக்க முடியுமா?

மத்திய நீர்வளக் கமிட்டியால் வலிந்து திணிக்கப்பட்ட,ரூல் கர்வ் அட்டவணைப்படி, செப்டம்பர் 20 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கலாம்.

HIGHLIGHTS

பெரியாறு அணையில் இனி 142 அடி தண்ணீர் தேக்க முடியுமா?
X

கோப்பு படம் 

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இ.சலேத்து, பொன்.காட்சிக்கண்ணன், சி.விஜய் மாரீஸ், பா.ராதா கணேசன், மை.ராஜன் தாமஸ் மற்றும் சுனில் கவாஸ்கர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

தென்மேற்கு பருவமழையின் மூலமாக தண்ணீரை பெறும் முல்லைப் பெரியாறு அணையின் இன்றைய நீர்மட்டம் 136 அடிக்கு சற்று மேலே இருக்கிறது. இந்நிலையில் நாளை மறுநாள் ரூல்கர்வ்படி 142 அடிநீர் தேக்கவாய்ப்பு இல்லை.

ஜூன் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் நீடிக்கும் தென்மேற்கு பருவமழையின் உச்சகட்ட காலம் என்பது, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் தான். அந்த இரண்டு மாதத்திலும் தண்ணீரை 142 அடிக்கு உயர்த்தக் கூடாது என்று திட்டமிட்டு செயல்பட்ட மலையாளிகளால், அணையின் நீர்மட்டத்தை ரூல்கர்வ் அட்டவணைப்படி கொண்டு வந்தது மத்திய நீர்வளக்கமிட்டி.

உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டு கொடுத்த தெளிவான தீர்ப்பின் அடிப்படையில், அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்திய பிறகு தான் ரூல்கர்வ் முறையை அமல்படுத்த முடியும் என்கிற தெளிவான சட்ட விதிகள் இருக்க, எந்த அடிப்படையில் மத்திய நீர்வள ஆணையம் இந்த முடிவை எடுத்தது என்று தெரியவில்லை.

தென்மேற்கு பருவ மழையின் இறுதி காலமான இப்போது, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை எப்படி தேக்க முடியும். இப்படி அடிப்படை புரிதல் கூட இல்லாமல் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் பணிபுரிகிறார்கள். ரூல்கர்வ் அட்டவணைப்படி கேரளாவை நோக்கி இரண்டு டிஎம்சி தண்ணீரை திருப்பி விட்டுவிட்ட நிலையில், சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனம் பெருத்த கேள்விக்குறியாகி இருக்கிறது. கூடுதலாக கம்பம் பள்ளத்தாக்கின் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் இருக்குமா என்று தெரியவில்லை.

வறண்ட உசிலம்பட்டிக்கு செல்லும் 58 ஆம் கால்வாயை இன்னும் நம்மால் திறக்க முடியவில்லை. இருபோகப் பாசனங்களின் நிலை என்னவாகும் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை மூலமாக பெரிய அளவிற்கு மழை பெறாத பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளின் நிலை அடுத்த காலங்களில் வறண்ட நிலை தான் நீடிக்கும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பூர்வீக வைகை பாசனம் ஓரளவு தண்ணீர் பெற்று விட்ட நிலையில், சிவகங்கை மாவட்டத்தின் பெரியாறு பாசனம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

பிரதான கால்வாய்களே தண்ணீர் முழு அளவை எட்டுமா என்கிற நிலையில், சிங்கம்புணரி , மறவமங்கலம் நீட்டிப்புக் கால்வாய் விவசாயிகள் நமது சங்கத்தை அணுகி, இந்த ஆண்டாவது தங்களுக்கு பெரியாறு தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

ரூல் கர்வ் முறைக்கு எதிராகவும், அதற்கு தடை கோரியும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, முறைப்படி பட்டியலிடப்பட்டு விசாரணைக்காக காத்திருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை குறித்து முழு விவரமும் தெரிந்த நீதிபதி சந்திர சூட் அமர்விற்காக அது காத்திருப்பதால், நாட்கள் இத்தனை ஆகிவிட்டது. இருந்தாலும் ரூல்கர்வ் முறையால் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் ஏற்படப் போகும் பாதிப்பு இனிதான் முழுமையாக தெரியவரும்.

அணையின் முழு கொள்ளளவான 152 அடியை நிலை நிறுத்தி விட்டு ரூல் கர்வ் முறையை அமல்படுத்தி இருந்தால் கூட ஆறுதல் அடைந்திருக்க முடியும். ஆனால் தற்காலிக தண்ணீர் நிறுத்தத்தை மையப்படுத்தி ரூல் கர்ல் முறையை அமல்படுத்தியதை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாளை உச்சநீதிமன்றத்தில் நமது வழக்கு பட்டியலிடப்படும் என்று நாம் எதிர்பார்க்கும் நிலையில், சட்ட ரீதியாக அடுத்த கட்டத்தை நோக்கி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை கொண்டு செல்வோம் என்று உறுதி அளிக்கிறோம்.

கேரள முதல்வரோடு நம்முடைய தமிழக முதல்வர் ஒரு சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவார் என்கிற நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.

Updated On: 18 Sep 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...