அறிவியல் சவால்களுக்கு தீர்வு காண பொறியியல் மாணவர்களுக்கு அழைப்பு
தேனி நாடார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லுாரி கண்காட்சி கருத்தரங்கில் அண்ணா பல்கலை மண்டல வளாக டீன் லிங்கதுரை பேசினார்.
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில் நுட்பக் கல்லுாரியில் மாணவர்களின் படைப்புகளால் உருவான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் கே.பி.ஆர்., முருகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் கே.எஸ்.,காசிபிரபு, இணைச் செயலாளர் ராஜ்குமார் வாழ்த்தி பேசினர். மதுரை அண்ணாபல்கலை மண்டல வளாக டீன் கே.லிங்கதுரை பேசியதாவது: திட்ட அடிப்படையிலான கல்வி கற்றலை உருவாக்குவதன் மூலம் மாணவர்கள் சிறந்த படைப்புகளை உருவாக்கலாம். சமூகத்திற்கு பயன்படும் சிறந்த கண்டுபிடிப்புகளை குறைந்த செலவில் உருவாக்க வேண்டும். மாணவர்களின் தனித்திறன், தொடர் பயிற்சி, அனுபவங்களை பெற்றுக்கொள்ளுதல் மூலம் அறிவியல் உலகில் தற்போது உள்ள சவால்களை தீர்க்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம் இவ்வாறு பேசினார்.
திண்டுக்கல் அண்ணா பல்கலை கட்டடவியல்துறை பேராசிரியர் சசிக்குமார், போடி அரசு பொறியியல் கல்லுாரி கணிணி மற்றும் அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் சிவரஞ்சனி, மதுரை அண்ணா பல்கலை.,பிராந்திய வளாக கணிணி மற்றும் அறிவியல் துறை பேராசிரியர் கார்த்திகேயன், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் கணிணி மற்றும் அறிவியல்துறை பேராசிரியர் புஷ்பலதா, திண்டுக்கல் பல்கலை., எலக்ட்ரானி்க்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறை பேராசிரியர் செந்தில்குமார், எஸ்டி எக்ஸ்போர்ட் கொள்முதல் மேலாளர் ஜெயலட்சுமி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu