தமிழகத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் கேரள அரசுக்கு மத்திய அரசு அறிவுரை
பைல் படம்
பேபி அணை மற்றும் மண் அணையினை பலப்படுத்த தமிழகத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் கேரள அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக இணை செயலர் சஞ்சய் அவஸ்தி, கேரள அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- முல்லை பெரியாறு அணையினை கண்காணிக்கும் குழுவிற்கு சுப்ரீம் கோர்ட் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. இக்குழு முல்லை பெரியாறு அணையினை முழு அளவில் கண்காணித்து அதன் பாதுகாப்பினை உறுதி செய்து வருகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை.
சுப்ரீம் கோர்ட் அறிவுரைப்படி, முல்லை பெரியாறு அணையில் உள்ள மண் அணை, பேபி அணை பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும். இதற்காக அப்ரோச்காட் ரோட்டினை பழுது பார்க்க வேண்டும். இப்பணிகளை தமிழக அரசு செய்ய கேரளா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள் பெருமளவில் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இன்று சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு கேரளாவிற்கு எதிராக எடுத்து வைத்துள்ள வாதத்திற்கும் (முல்லைபெரியாறு அணை விவகாரத்தை பெரிதுபடுத்த (பிரச்னையாக்க) கேரளா முயற்சிக்கிறது என சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது) தமிழக விவசாயிகள் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu