தேனி போலீசாருக்கு மோர் வழங்கும் திட்டம்: எஸ்.பி. தொடங்கி வைத்தார்

தேனி போலீசாருக்கு மோர் வழங்கும் திட்டம்: எஸ்.பி. தொடங்கி வைத்தார்
X

தேனி நேருசிலை அருகே போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கும் போலீசாருக்கு எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே பழச்சாறு கொடுத்து திட்டத்தை தொடங்கி வைத்தார். அருகில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்ஷிணாமூர்த்தி.

தேனியில், போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு, மோர் வழங்கும் திட்டத்தை எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்தார்.

தேனியில் இப்போதே வெயில் கடுமையாக உள்ளது. இப்போது தொடங்கிய வெயில் இனி ஜூலை வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு எழுமிச்சை பழச்சாறு, (உப்பு- சர்க்கரை கலந்தது) மற்றும் நீர்மோர் வழங்கப்படும். ஆண்டு தோறும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தை தேனி நேருசிலை அருகே எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்ஷிணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். கடும் வெயிலில் பணிபுரியும் போலீசார் இத்திட்டத்தால் பலனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing future