தேனி நகராட்சி 4வது வார்டில் சுயேட்சையாக களமிரங்கும் முக்கிய பிரமுகர்

தேனி நகராட்சி  4வது வார்டில்  சுயேட்சையாக களமிரங்கும்  முக்கிய பிரமுகர்
X

தேனி நான்காவது வார்டு சுயேட்சை வேட்பாளர் வி.ஆர்.ராஜன்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மானியக்கடன், வட்டியில்லா தொழில் கடன் பல நுாறு கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்துள்ளார்

தேனி நகராட்சியின் 4வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக முக்கியப்பிரமுகர் வி.ஆர்.ராஜன் களம் இறங்கி உள்ளார்.

தேனி நகராட்சிக்குள்பட்ட அல்லிநகரம் 4வது வார்டினை சேர்ந்தவர் வி.ஆர்.ராஜன்( 51 ). இவர் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலாளராக இருந்து வருகிறார். தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அந்தஸ்த்து கொண்ட அதிகாரிகளுடன் நெருங்கிய பழக்கம் உள்ளவர்.

இவரது மனைவி ஆசிரியை. இவரது மகன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரியில் எம்.டி., படித்து வருகிறார்.பெரும் தொழில் அதிபரான இவர், ஆரம்ப காலம் முதல் தற்போது வரை மக்கள் சேவையில் இருந்து வருகிறார். மக்கள் விரும்பி கேட்டுக் கொண்டதால், இந்தமுறை 4வது வார்டில் சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். காரணம் இவருக்கு அத்தனை கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளதால், அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் போட்டியிடுவதைத் தவிர்த்து விட்டார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்ட காலங்களில், அதற்கான நடவடிக்கை குழுவில் இவர் அங்கம் வகித்திருக்கிறார். இவர் வழங்கிய கல்வி உதவித்தொகையில் மருத்துவம், மற்றும் உயர்கல்வி முடித்து இன்று பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டும்.பிங்க் அறக்கட்டளையுடன் இணைந்து இவர், தமிழகம் முழுவதும் புற்றுநோய் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனா காலத்தில் மட்டும் தனது சொந்த பணம் 30 லட்சம் ரூபாயினை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக வழங்கி உள்ளார். மத்திய அரசு நியமித்திருந்த குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை ஆலோசகராக 4 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.மத்திய அரசின் தொலை தொடர்பு வாரியம், ரயில்வே வாரிய உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.

சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக 4 மாநிலங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மானியக்கடன், வட்டியில்லா தொழில் கடன் பல நுாறு கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்துள்ளார். மாவட்டந்தோறும் மகளிர் தொழில்பூங்கா அமைக்க மத்திய அரசிடம் கேட்டு வருகிறார். இப்போது சுயேட்சையாக களம் இறங்கி உள்ள இவர், 4வது வார்டில் தான் நிறைவேகற்றக்கூடிய பணிகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை தனது தேர்தல் அறிக்கை மூலம் வெளியிடுகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!